இந்தியா

இந்தியா

ராணுவத்தில் ஷார்ட் சர்வீஸ்: ஷின்சோ அபே கொலையை சுட்டிக்காட்டி எச்சரிக்கும் திரிணமூல் காங்கிரஸ்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்ற இளைஞர் ராணுவத்தில் குறுகிய கால சேவையில் இருந்தவர். இதனை சுட்டிக்காட்டியுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு ராணுவத்தில் அக்னி பாதை போன்ற குறுகிய கால சர்வீஸை அனுமதிப்பதில் உள்ள பாதகங்களை இதன் மூலம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனை நிராகரித்துள்ள பாஜக மேற்குவங்க மாநிலத் தலைமை, இந்தியாவில் எந்த ஒரு முன்னாள் ராணுவ வீரரும் இது போன்ற...
இந்தியா

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை-உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 மாதச் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடன் தொகையை திரும்பச் செலுத்தாமல், பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன்...
இந்தியா

கர்நாடகா கடலோர மாவட்டங்களில் மிககனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கர்நாடகா நாட்டின் கடலோர மற்றும் மல்நாடு பகுதிகளில் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளது. அத்துடன் ஆறுகள் பெருக்கெடுத்து விவசாய வயல்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனிடையில் மங்களூருவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
இந்தியா

வரி ஏய்ப்பு புகார் – டோலோ 650 மாத்திரை நிறுவனத்தில் சோதனை

டோலோ 650 மாத்திரை நிறுவனத்துக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. பெங்களூருவை சேர்ந்த மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் பாராசிட்டமால் வகை டோலோ 650 மாத்திரையை தயாரித்து வருகிறது. கரோனா பரவிய 2020-ம் ஆண்டு மட்டும் 350 கோடி மாத்திரைகளை விற்று ரூ.400 கோடி வரை அந்த நிறுவனம் வருமானம் ஈட்டியது. இந்நிலையில் டோலோ 650 மாத்திரையை உற்பத்தி செய்யும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் வரி...
இந்தியா

காலரா பரவலுக்கு ரங்கசாமி முழு பொறுப்பு ஏற்க வேண்டும்; முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

'சுகாதார துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் ரங்கசாமி, பொறுப்பற்று செயல்படுகிறார். காரைக்காலில் காலரா பரவலுக்கு அவர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்' என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்காரைக்கால் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு, காலரா பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பலர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதை தொடர்ந்து, மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலை மற்றும் 144 (2) உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வர்...
இந்தியா

டெல்லியில் இருந்து புறப்பட்டு தொழில்நுட்ப கோளாறால் கராச்சியில் தரையிறங்கிய விமானம் மீண்டும் துபாய் புறப்பட்டது…!

டெல்லியில் இருந்து இன்று காலை 138 பயணிகளுடன் துபாய் நோக்கி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பெயிங் 737 மெக்ஸ் ரக விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுப்ட கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, காலை 9.15 மணியளவில் விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாகிஸ்தான் விமான நிலையத்தில் இந்திய விமானம் தரையிரக்கப்பட்டு அதில் இருந்த பயணிகளுக்கு போதிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது. இதனை...
இந்தியா

ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரைக்கு தயாராகும் ஒடிசா: 2 ஆண்டுகளுக்கு பின் யாத்திரையில் பக்தர்களுக்கு அனுமதி

புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை ஒடிசாவில் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்காக மாநிலம் முழுவதுமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒடிசாவின் பூரி நகரத்தில் உள்ள ஆலயத்தில் ஜெகன்நாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ரத யாத்திரை நடைபெறும். இதில் பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வது வழக்கம். ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கோலாகலமாக நடைபெறும் இந்த யாத்திரையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் பங்கேற்க...
இந்தியா

இன்று முதல் ரயில் முன்பதிவில் நாடு முழுவதும் அதிரடி மாற்றம் நடைமுறைக்கு வந்தது!

நாடு முழுவதும் ரயில் முன்பதிவில் இன்று முதல் அதிரடி மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தது. இனி மேல், ஒரே நேரத்தில் ரயில் பயணத்திற்கான முன்பதிவு செய்ய இயலாது. பயணிகள், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் முன்பதிவு செய்ய தனி நேரமும், ஸ்லீப்பர் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்வதற்கு தனி நேரமும் ஒதுக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது....
இந்தியா

உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் – முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு பாஜகவினர் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் 39 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணி திரண்டுள்ளனர். இதனால் ஆட்சியில் இருப்பதற்கான பெரும்பான்மையை சிவசேனா இழந்தது. இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவின் பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில்...
இந்தியா

இந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு 18,819 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் நேற்று (ஜூன் 29) 14,506 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை 18,819 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,819 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,34,52,164 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 13,827 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில்...
1 12 13 14 15 16 82
Page 14 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!