இலங்கையில் ஜாமியா நளீமியா கலா நிலைய முதல்வருடன் தமிழக பிரமுகர் சந்திப்பு
கொழும்பு : இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட தொழில் அதிபர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ முகம்மது முகைதீன் அவர்கள் ஜாமியா நளீமியாவுக்கு சினேகபூர்வமான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்கள். அந்த கலாநிலையத்தின் முதல்வர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மது அவர்களை சந்தித்து சமுதாயம் சார்ந்த பல விடயங்களை கலந்து பேசினார்கள். ஜாமியா நளீமிய்யா இலங்கை சமூகத்துக்கு காத்திரமான பங்களிப்பை சுமார் 50 வருட காலங்களாக வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கல்வி நிறுவனம்...