அபுதாபி
ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியது அபுதாபி. அமீரகத்திலுள்ள இந்நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். அபுதாபி தவிர்த்து அமீரகத்தில் ஆறு மாநிலங்கள் அமைந்து உள்ளன. அவை துபாய், ஷார்ஜா, அஜ்மான், புஜைரா, ராசல் கைமா, அலைன் ஆகியவை ஆகும். கிமு மூன்றாம் ஆண்டு முதல் இங்கே மக்கள் குடியிருப்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது. கிபி 18 ஆம் நூற்றாண்டில் பனியாஸ் என்ற பழங்குடியினர் மூலமாக இந்த நகரம் முழுமையாக மக்கள் நடமாட்டம் துவங்கியது. அப்போது மந்தை வளர்ப்பும், மீன்பிடித்தலும் அவர்களின் தொழிலாக இருந்தது. கிபி 20 ஆம் நூற்றாண்டில் அபுதாபியின் பொருளாதாரம் ஒட்டக வளர்ப்பிலும், பேரீச்சு,...