இலக்கியம்

இலக்கியம்

கவிதை

வெயிலெரிக்கும் வெக்கை

பெரும் புளியமரத்து நிழலுதிர்ந்து வெயிலெரிக்கும் வெக்கையில் அலறியெழுந்த ஆறுமாத பேரனை நெஞ்சிலேந்திக்கொண்டாள் ஆயா கண்ணுரித்த கையோடு கால்காணி கடல செத்தைகளையும் ஒத்தையாய் உலர்திக்கொண்டிருக்கிறாள் தாத்தா தவறிய நாளிலிருந்து அம்மா நெனப்பெடுத்து அழுதவனுக்கு வத்திய மார்பொன்றை சப்பக்கொடுத்து துவரஞ்செடியோராம் தூங்க வைத்துவிட்டாள் ஒருவழியாய் மரியம்மாவை நம்பிக்கொண்டிருந்தவள் மண்ணெண்ணெயிலெரிந்த மகளை கண்ணீராலணைத்து தோற்றாள் கடவுளெல்லாம் கைவிரித்த பின் அவள் நம்பியிருப்பதெல்லாம் கன்றிழந்த ஒரு பசுவையும் காலுடைந்த வெள்ளாட்டையும் தான் நிகழ்பாரதி...
கவிதை

அடுத்தவர் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்றி வை

இவ்வாரக் கவிதை : ஓர் ஏழைக்கோ இயலாதவருக்கோ.. ஒருவேளை உணவிட்டு வயிற்றுப் பசி நீக்கி வை... ஓர் ஆடை கொடுத்து மானம் மறைக்கச்செய்... குளிர் நீர் கொஞ்சம் தந்து தாகம் தணியச் செய் .. ஆபத்தில் கொஞ்சம் அடுத்தவனுக்கு உதவு ... ஏழை ஒருவனுக்கு இதயத்தால் இரங்கு... வாடிய முகத்தின் வருத்தம் களையச்செய்... முரட்டு மனிதருக்கும் இரக்கம் காட்டு ... அடுத்தவர் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்றி வை ... மாட்டை...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : மறைந்து வரும் சடங்கு சம்பிரதாயங்கள்

( பகுதி 1 ) நெல்லை கவி க.மோகனசுந்தரம் சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதில் தமிழ்ச் சமுதாயதிற்கு ஈடு இணை இல்லை.  தாய் மாமன், அப்பா கூட பிறந்த அத்தை, மைத்துனன், சித்தப்பா மக்கள், பெரியப்பா மக்கள் என்று ஒரு கூட்டமே அதை கட்டிக் காத்தது. முறை வாசல், கட்டு, வழிமுறைகள் என்றெல்லாம் இருந்தது. சமீபத்திய காலத்தில் அவைகள் குறைந்து கொண்டே வருகிறது என்ற ஐயம் வருகிறது. ஏனெனில் பத்திரிகை கூட...
கவிதை

நதிநீரில் அளாவிய கால்கள்

சலசலத்து ஓடும் இசைக்கு ஞானம் தந்தது உன் கொலுசு தாளத்தை வெட்கமுற செய்யும் சினுங்களில் யாவும் வசப்படும் சிட்டுக் குருவிகள் குலவையிடுவதும் சில் வண்டுகள் குதுகலிப்பதும் பாதம் பார்த்து நடந்தது கூழாங்கற்களைப் பூப்படையச் செய்தது நதிநீரில் அளாவிய கால்கள் .... யாழ் ராகவன்...
கட்டுரை

நூல் அறிமுகம் : நகரத்தார் பெண் சாதனையாளர்கள்

பதிவு: சித்தார்த்தன் சுந்தரம் சமீபத்தில் வாசித்த `இப்படியும் சாதிக்கலாம்: நகரத்தார் பெண் தொழிலதிபர்களின் பேட்டிகள்” மூலம் நகரத்தார் சமூகப் பெண்களில் வெற்றிக் கொடி நாட்டிய 17 ஆச்சிமார்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இது போல இந்த சிறிய சமூகத்தைத் சேர்ந்த பல பேர் உலகெங்கும் வியாபித்து இருக்கலாம். அதையும் இந்நூலாசிரியர் தேனம்மை லெட்சுமணன் ஆவணப்படுத்த வேண்டும். `விடாமுயற்சியே வெற்றி தரும்’ எனச் சொல்லும் மணிமேகலை சரவணனிலிருந்து `பேருந்தில்...
கவிதை

மழைப் பிரியை

*மழை வரும் போதெல்லாம் தவறாமல் வந்துவிடுகின்றது உந்தன் ஞாபகம் நேற்று எனது ஊரில் மழை *மழைக்கவிதை கேட்டு நீ அடம்பிடித்த நாளில்தான் துளிகளுக்கெல்லாம் சிறகு முளைத்திருந்தது *வெவ்வேறு திசையிலிருந்தோம் நாம் இருவரும் மழை தான் நம்மை இணைத்திருந்தது.... * மழை நாளில்தான் பேசவும் தொடங்கினாய் மழை நாளில் தான் பிரிந்தும் செல்கின்றாய் *நீ வருவாயென நம்பிக்கையிருக்கின்றது மழைக்காலம் இன்னமும் முடிந்துவிடவில்லை கூடல்தாரிக்...
கட்டுரை

உன்னை அறிந்தால்!

உன்னை அறிந்தால்! என்றும் இல்லாமல் இன்றைய காலத்தில் அதிகமாக பத்திரிக்கைகளில் பேசப்படுவது எது? - நவீன சித்தர்கள் எழுதும் வாழ்க்கை நெறிகள். - நவீன ஆராச்சியாளர்களின் ( மனித) சுய மேம்பாடு. - நவீன வாத்ஸ்யாயனர்களின் காம சூத்ராக்கள். ஏன் இவைகள் இன்று மிகவும் பேசப்படுகின்றன? இவைகள் ஆக்கிரமிக்காத பத்திரிக்கைகளே உலகில் இல எனலாம். மனிதன் இன்று தன் திறமையை பிரதானமாக நம்புகிறான். வாழ்க்கை, சம்பாத்தியம், மனித உயர்வு, ஆன்மீகம்...
கட்டுரை

தந்தை பெரியாரின் பார்வையில் லஞ்சம்

அதிரை எஸ்.ஷர்புத்தீன் சிறப்பாசிரியர்- 'நான்' மின்னிதழ் லஞ்ச ஒழிப்பு அதிகாரியே லஞ்சம் வாங்கும் செய்திகள் இன்று நம் நாட்டில் பத்திரிக்கைகளில் அடிக்கடி வெளியாவது நமக்கு சர்வசாதாரணமாகிவிட்டதுதான்!. சமீபத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கூறினார்: ‘’தமிழ்நாட்டில் சமூக மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பொதுமக்கள் ஓட்டுக்குக்காசு வாங்கக்கூடாது’’ என்று. அன்றே தந்தை பெரியார் அவர்கள், ‘’வாக்காளர்கள் பணம் பெற்றுக்கொண்டு ஓட்டளிப்பதனால்தான் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள். ’’ ‘’...
கட்டுரை

நான் என்னை அறிந்தால்…

கிளியனூர் இஸ்மத் அமீரக வாழ்க்கை எனக்கு படிப்பியலில் ஆர்வத்தைக் கொடுத்தது. சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ஜெயகாந்தன், சிவசங்கரி, பாலகுமாரன், அப்துற்றஹீம், எம்.எஸ்.உதயமூர்த்தி, கவிகோ, கவியரசு, மு.மேத்தா இன்னும் பலரின் எழுத்து என்னை எழுத தூண்டுவதற்கு காரணமாகியது. தத்துவங்களை படிக்கும்போது மனதில் ஒருவித ஈர்ப்பு என்னை ஆட்கொள்ளும்.சிறுவயதில் திருக்குர்ஆனின் தமிழாக்கம் என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. என் செயல்களில் திருப்பத்தைக் கொடுத்தது. பைபிளிலும் பகவத்கீதையும் ஆழமாக சிந்திக்க வைத்தது. அதன் தாக்கங்களே...
கவிதை

இவ்வாரக் கவிதை : சூரியச் சுடர்

அதிகாலைச் சூரியனின் குளுமை அடுத்து வரும் பொழுதுகளில் அக்னியாக மாறுகிறது... அஸ்தமனப் பொழுதுகளில் மீண்டும் முன் போலவே குளிர் நிலைகளில் கூடி விடுகிறது சூரியனுக்கும் வாழ்வு ஒன்றுதான் எவ்வளவு களைத்தாலும் மறுநாள் சிரித்துக்கொண்டே எழுந்து விடுகிறது... என்ன புரிகிறது ஏதாவது சொல்கிறதா? நீயும் எவ்வளவு களைத்தாலும் சிரித்துக்கொண்டே எழந்து நட ... ஒருபோதும் அது தன் சோர்வையும் சோம்பலையும் வெளிக்காட்டுவதே இல்லை... கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே யார் சொல்லித்...
1 3 4 5 6 7 51
Page 5 of 51
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!