கவிதை

கவிதை

வழிப் போக்கன்..!!

யார் வீட்டுத் தலைமகனோ.?? இல்லை இளையவனோ..?? செல்லும் வழி தோறும் சில நேரம் அவன் முன்னே பல நேரம் அவன் பின்னே... பார்வையில் எந்த சலனமில்லை அவன் மனமோ வெள்ளைப்பலகை.!! இருபத்திரண்டு வயது குழந்தை யாருக்கும் எந்த இடறுமில்லை சங்கிலிகள் அவனை பிணைக்கவில்லை.!! மனதில் எந்த கள்ளமுமில்லை அவன் கண்களில் ஒரு ஒளியின் தொல்லை..,!! இளைய பட்டாளங்கள்.., இணைய உலகில் ஏதோ, தேடிய போது.. உற்சாகமாய் சாலை ஓரம் துள்ளும்...
கவிதை

இனிதுழைப்போம் என்தோழா எழுந்தே வாநீ!

27.2.2022 அன்று "ரமணி ராஜ்ஜியம்" நிகழ்ச்சியில் "விருப்பத்தலைப்பில்" கவிதைகள் வரவேற்கப்பட்டு நடைபெற்ற கவியரங்கத்தில் ஆகச்சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதை இனிதுழைப்போம் என்தோழா எழுந்தே வாநீ! பசியென்ற சொல்லுக்கிங் கிடமே இல்லை பாங்காகத் தொழில்ஒன்றைத் தேர்ந் தெடுத்தால் நசித்துநமைத் தாக்குகின்ற வறுமை யில்லை; நனியார்வம் எனும்இலக்கில் நடைப யின்றால்! பொசுக்குகின்ற ஏழ்மைத்தீ புகைந்தே போகும் புறப்படுவாய் என்தோழா பொதுமை நோக்கில்! கசிகின்ற கண்ணீரில் மிதப்போர் தம்மை கனிந்தஅன்பால் அரவணைப்போம் உழைப்பால்...
கவிதை

கால மாற்றம்

20.2.2022 ஒலிபரப்பான "ரமணி ராஜ்ஜியம்" நிகழ்ச்சியில் ஆக சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதை கால மாற்றம் மாற்றம் எமது மானிடத் தத்துவம் ஏற்றம் காட்டினார் எம்கவி யரசர் வேற்றார் வருகை வீணாய் விதைத்த மாற்றம் ஏனோ மனத்தை வாட்டுமே அப்பா அம்மா தாத்தா பாட்டி எப்போதும் உறவுகள் என்றும் விருந்தினர் தப்பாமல் நிறைந்த தரமிகு நாளெங்கே முப்பாலில் சொன்ன முழுஇன்ப மெங்கே அத்தை என்ற அழகான உறவே முத்தாய்...
கவிதை

தாய் தமிழ் மாெழி

மொழி ஒரு மனிதனின் பிறப்புத் தொப்புள்கொடி..... மொழிகள் பல கற்றாலும் பெற்றாலும் தாய்மொழி தமிழ் தலையாய மொழி. ..... தாய்ப்பால் அருந்துவதை போன்ற ஒரு உணர்வு தமிழ்மொழியைப் படிக்கும்போது இருக்கும் ..... தமிழ் படிக்கும்போது ஒவ்வொரு முறையும் புதிதாக அர்த்தங்கள் பிறக்கும்.... மொழி தன்னைப் பேச மொழி எடுத்துக்கொண்ட வடிவமே மனிதன்..... அதுவும் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான தமிழை நாம் பேசுகிறோம் என்பது பெருமை... எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ்...
கவிதை

“தென்றல் சுகம்”

"தென்றல் சுகம்" என்ற தலைப்பில்13.2.2022 அன்று ஒலிப்பரப்பான "ரமணி ராஜ்ஜியம்" நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட கவிதை உன்னைப்போல் நானிருக்க என்னுள்ளம் ஏங்குதடி! உள்ளத்தில் நிறைந்தவரிடத்து உன்னைப்போல் நானிருக்க என்னுள்ளம் ஏங்குதடி! தென்திசை தேவதையே! மென்மையான வசந்தகால வருகையே! இனிமையை எல்லோருக்கும் அள்ளித்தரும் சமதர்ம தென்றலே! அருமையான சுகத்தால் அகப்புறத்தினை ஆளும் அருமருந்தே! நறுமணம் கமழ நீ தொட்டுத் தழுவ சுமைகள் விட்டு விலகிப் போகுமடி! மனச் சுமைகள் விட்டு விலகிப்...
கவிதை

ஜன்னல் வழி…

ரமணி ராஜ்ஜியம் 06-02-2022 ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட கவிதை விழிக்கு இமைகள் ஜன்னல்கள் அதன் வழியில் பார்வையின் பரவசங்கள் காதல் வழிகளை அடைத்து வைத்தாலும் காதலின் குரல்கள் ஜன்னல் வழிகளில் சாடைகள் பேசும்! என்வீட்டு ஜன்னலுக்கும் எதிர் வீட்டு ஜன்னலுக்கும் சாலைகள் குறுக்கே தடையாக இருந்தாலும் ஜன்னல் வழிகளில் சந்திப்பு நினைவுகள் பாலமாய்.......! சாதியும் மதமும் அன்பு வழிகளை ஆயுதங்களினால் அரட்டப்பட்டிருக்கிறது மனிதமனங்களில் இவைகள் எப்போது...
கவிதை

பயணங்கள்

வாழ்வியல் பயணத்தில் வசந்தமும் வருத்தமும் ஊழ்விணையால் வந்ததல்ல உண்மையை உணர்ந்திடுவீர் தாழ்விலா சிந்தையே தரணியில் உயர்த்துமே சூழ்நிலை யாவையுமே சுற்றமாய் சூழுமே குற்றங்கள் களைந்தே குவலயத்தில் உயர்வோம் முற்றத்தில் முடங்கிடும் முடிவல்ல வாழ்க்கை உற்றநல் பாதையில் உயர்ந்திட எண்ணியே கற்றநல் மாந்தரே களிப்புடன் பயணிப்பீர் ஆற்றிடும் பணிக்காக அயல்நாடு பயணித்தீர் போற்றிடும் தேசத்தை பொய்யென்று சொல்லாதீர் நாற்றிட்ட வயலுக்குள் நல்லுழவர் பயணமெல்லாம் வற்றிடா நீராலே வளம் பெறலாகுமே பள்ளியெனும் சோலைக்குள்...
கவிதை

முதுமை

மரங்கள் முதுமைகண்டால் பெருமையன்றோ, மலைகளின் முதுமையென்றும் உயரமன்றோ, மனிதன்மட்டும் முதுமைகண்டு துயரமேனோ, இயற்கையிலே இதுவுமொரு பருவம்தானோ. குழந்தையாய் மாறிவிட மனம்துடிக்கும், மழலைபோல் பொக்கைவாயால் அதுசிரிக்கும், கடந்துவந்த பாதைகளை இசைவோடும், கண்டோரிடம் தினம்தினம் அசைபோடும். உருண்டோடிய காலங்களின் பரிமாற்றம், கைரேகைகள் உடற்முழுக்க இடமாற்றம், நரம்புமண்டல அறிவியலை அதுகாட்டும், தொட்டணைத்து பாசவழி சுருதிகூட்டும். பிள்ளைகளின் அரவணைப்பை எதிர்நோக்கும், மற்றதெல்லாம் துச்சமென மனம்பார்க்கும், ஆறுதலாய் நாலுவார்த்தை பேசிவிட்டால், அகிலத்தையே ஆள்வதுபோல் குதூகலிக்கும். இன்றிருக்கும் இளையோரே...
கவிதை

இட்டார் பெரியார் – அத்தாவுல்லா

பெரியார் இட்டார் இடாதார் இழிகுலத்தார்... நம் தமிழ் சமுதாயத்திற்குத் தேவையானதை இட்டார் பெரியார் அதனால் - அவர் பெரியார்! அவர் - புரையோடிப் போயிருந்த சமூகப் புண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த ஆன்மீக வாதி! தாழ்த்தப் பட்ட மக்களைத் தலை நிமிரச் செய்ய தண்டோரா போட்ட விடுதலை முரசு.... இந்தியாவுக்குள் இருந்து கொண்டே பார்ப்பனீயத்தை எதிர்த்துப் படை எடுப்பு நடத்திய இரண்டாம் கஜனி! வாளுக்குப் பதில் வைத்திருந்தது என்னவோ கைத்தடிதான்.......
கவிதை

வேதியல் வினையோ நீ யார் விட்ட சாபமோ நீ

சுவாசம் கூட தாழ்ப்பாள் இட்டே இயற்கையை சுவைக்கிறது.. கொல்லுயிரியின் தாக்கம் யாருமில்லா சாலையும் கூட்டமில்லா சந்தையும் தும்மலுக்கே ஓட்டம் பிடிக்கும் மனிதமும்... ஓ!!! வீரியம் கொண்ட எதிரியே உன் கிரீடத்தின் அர்த்தம் இன்றுதான் புரிந்தது.. இருந்தாலும் ஒன்றை மட்டும் மறக்காதே வருவான் ஓர் நாள் உன்னையும் வீழ்த்தும் சக்திமான்.. அதுவரை... நின்று திணறும் சுவாசமும் பீதியில் கதவடைப்பு நடத்துமே...!!! மஞ்சுளாயுகேஷ்  ...
1 10 11 12 13 14 16
Page 12 of 16

Right Click & View Source is disabled.

error: Content is protected !!