கோ. மகேசன் “கவிதைகள்”
அதுவரை அசையாதிருந்த அந்த மரத்தில் அணிலொன்று வியர்வையுடன் கீழே அமர்ந்திருந்த என்னைப் பார்த்து மேலே ஏறியபடியே கண்களை மேலும் கீழும் அசைத்தது. அந்த அசைவில் மரத்தை தான் அசைத்தற்கான மமதையும் அசைந்தது காற்றோடு சேர்ந்தே . ஒலி பெருக்கியில் மந்திர உச்சாடனங்கள் காதை பிளக்க அதே ஒலி பெருக்கியில் இடையிடையே காவல்துறையின் பக்தகோடிகளின் கவனத்திற்கு, பெண்கள், குழந்தைகள் மற்றும் அணிந்திருக்கும் நகைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்ளவும், அருகில் உள்ள வர்களை...