குக்கூ
தனிக் கிளையிலமர்ந்துகொண்டு தனிப் பாடல் பாடுகின்றாய் உன் குரலால் காற்றுக்கு மறு ஜென்மம் அழகான இசை வாழ்வு வாங்கக் கிடைக்காத இசைக் கருவி உனது குரல் புலப்பாடாத இசையருவி நனைக்கின்றாய் துவட்ட முடியாத ஈரம் உனது இசை நீ கூவும் தமிழ் எழுத்து தேன் கூட்டின் வடிவம் பிழிந்து தருகின்றாய் இதயத்தில் இனிக்கிறது உன் பாடல் கேட்டதினால் அப்படியே நிற்கின்றேன் குயிலே நீ மரம் தாவிப்போவதென்றால் எனக்கும் உந்தன் சிறகு...