ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளில் ‘கால்வின் சுழற்சி’யைக் கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியலாளர் மெல்வின் கால்வின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 8, 1911).
மெல்வின் கால்வின் (Melvin Ellis Calvin) ஏப்ரல் 8, 1911ல் அமெரிக்கா மின்னசோட்டா நகரில் எலியாஸ் கால்வின் மற்றும் ரோஸ் ஹெர்விட்ஸ் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். கால்வின் சிறு குழந்தையாக இருந்த போது அவரது குடும்பம் டெட்ராய்டுக்கு குடிபெயர்ந்தது. 1928ல் மத்திய உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1931 ஆம் ஆண்டில் மிச்சிகன் சுரங்க மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் (இப்போது மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்) தனது இளங்கலை அறிவியல் பட்டத்தையும்,...