தமிழகம்

தேனி மாவட்டம்ஆண்டிபட்டி ஷான்விகா மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம்

68views
தேனி மாவட்டம்ஆண்டிபட்டி ஷான்விகா மருத்துவமனை சார்பில் மருத்துவர்.T. அன்புக்குமார் MD தலைமையில் நவம்பர் 20ம் தேதி அன்று மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் மக்களின் நலன்கருதி சிறப்பான முறையில் நடைபெற்றது.
முகாமில் 220 நபர்களுக்கு முழு உடல் பரிசோதனை, இரத்த பரிசோதனைகள், இ.சி.ஜி பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இரத்த தான முகாமில் தேனி மருத்துவக்கல்லூரி இரத்த வங்கி மருத்துவ அலுவலர் பிரியா மற்றும் செவிலியர்கள் பங்கேற்று முகாமை சிறப்பாக நடத்த உதவினர். 60 கொடையாளிகள் இரத்ததானம் செய்தனர். முகாமில் கலந்துகொண்ட மருத்துவர். முத்துகுமார், கலாம் மாணவர் இயக்கம் நண்பர்கள் அனைவருக்கும் ஷான்விகா மருத்துவமனை ஊழியர்கள் மற்றும்தினஓசை மாவட்டச் செய்தியாளர் A. சாதிக்பாட்சாஅவர்களும்முகாமில்கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!