தமிழகம்

மத்திய அரசு நிதியை முறையாக பயன்படுத்த பாஜக பட்டியல் அணி ஆர்ப்பாட்டம்

68views
மத்திய அரசு ஒதுக்கும் சிறப்பு உட்கூறு திட்ட நிதி, பட்டியல் சமூகத்திற்கான துணைத்திட்ட நிதியை உரிய செலவு வலியுறுத்தி பாஜக பட்டியல் அணி சார்பில் அண்ணல் அம்பேத்கர் வேடமிட்டவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி புரிந்த திராவிட கட்சிகள் மத்திய அரசு ஒதுக்கும் சிறப்பு உட்கூறு திட்ட நிதி, பட்டியல் சமூகத்திற்கான துணைத்திட்ட நிதியை உரிய செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவதும், தங்கள் இஷ்டம் போல் செலவிடுவதும் வாடிக்கையாக உள்ளது .
கடந்த 1996 மே 13 முதல் 2001 மே 13 வரை ஆட்சியில் இருந்த திமுக அரசு சமத்துவபுரம் என்ற பெயரில் பட்டியல் சமூக நிதியை எடுத்து செலவு செய்தது. 1997 – 1998 நிதி ஆண்டில் ரூ.594.53 கோடி , 1998 – 1999 நிதி ஆண்டில் ரூ.509.70 கோடி, 1999 – 2000 நிதி ஆண்டில் ரூ.169.07 கோடி நிதியை செலவிடாமல் திருப்பி அனுப்பிய துரோகம் அரங்கேறியுள்ளது. கடந்த 2006 மே 13 முதல் 2011 மே 15 வரை திமுக ஆட்சியில் பட்டியல் சமுதாயத்திற்கு ஒதுக்கிய நிதியை 2006 செப்.16 அன்று அனைத்து சமுதாயத்திற்கும் இலவச டிவி வழங்கி தன் கட்சியை வளர்க்க விளம்பரம் தேடிக் கொண்டார். 2010 பிப்.18 அன்று தமிழகம் வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் என்.எம் காம்ப்ளே பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கிய நிதியை முறையாக செலவழிக்கவில்லை என அறிக்கை விடுத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-2022 நிதி ஆண்டில் ரூ.2,418 கோடி, 2022 – 2023 நிதி ஆண்டில் ரூ.16,442 கோடி ஒதுக்கியதில் ரூ.10,446 கோடி நிதியை செலவு செய்யாமல் ஏமாற்றியுள்ளனர். பட்டியல் இன மக்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கிய நிதியை கொள்ளையடிக்கும் தமிழக திமுக அரசை கண்டித்து இராமநாதபுரம் அரண்மனை முன்பு பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில், பாஜக மாவட்ட தலைவர் கதிரவன் முன்னிலையில் அண்ணல் அம்பேத்கர் வேடமிட்டவரிடம் அளித்தனர். மாநில செயலர் வழக்கறிஞர் பிரபு, மாவட்ட பொதுச்செயலர்கள் காளி ராஜா , நேதாஜி, முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் பிச்சை, மாவட்ட செயலர் உமா ரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணன், கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் செந்தில் குமார், கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் ஹீரோ கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!