தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாள் திமுக நலத்திட்ட உதவிகள்

118views
திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மண்டபம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நகர் திமுக செயலர் கே.அப்துல் ரஹ்மான் மரைக்காயர் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. கவுன்சிலர்கள் எஸ்.சாதிக்பாட்ஷா, எம்.வாசிம் அக்ரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் பிவிஎம் அறக்கட்டளை மனவளர்ச்சி குன்றியோருக்கு ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக செயலரும், நகர் மன்ற தலைவருமான ஆர்.கே.கார்மேகம் ஏற்பாட்டில் காலை உணவு வழங்கப்பட்டது. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், சாலை ஓர வியாபாரிகள், ஆதரவற்றோருக்கு இனிப்பு, உணவு வழங்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நற்பணி மன்றத் மாவட்ட தலைவர் ஆர்.கே.கே.கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.
ராமேஸ்வரம் நகரின் பல்வேறு இடங்களில் நகராட்சி தலைவர் கே.இ.நாசர்கான் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!