தமிழகம்

ரூபாய் மூன்று கோடியே 90 லட்சம் செலவில் , திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை – ஒன்றிய அதிகாரிகள் , அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்பு.

78views
மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள பழைய திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , மிகுந்த சேதாரம் அடைந்து, தரையில் இருந்து பள்ளத்தில் கட்டிடம் அமைந்துள்ள படியால், அதனை தகர்த்துவிட்டு, புதிய அலுவலகம் கட்டுவதற்காக மூன்று கோடியே 90 லட்சம் செலவில், இன்று ( 24-11-2022) பூமி பூஜை நடைபெற்றது.
புதிதாக கட்டிடம் அமைக்கப்பட உள்ள இடத்தில் நடைபெற்ற பூமி பூஜையில், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் திரளாக கலந்து கொண்டு புதிய கட்டிடம் அமைப்பதற்கு உண்டான பணிகளை துவக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!