தமிழகம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க புதிய கட்டிடப்பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது

37views
கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் பகுதியிலுள்ள வீர வசுந்தராயர் மண்டபம் கோவில் வளாகத்திற்குள் அமைந்துள்ள கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது.
அதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி கோவிலுக்கான தீயணைப்பு நிலையம் உருவாக்கப்பட்டு மேலச்சித்திரை வீதியிலுள்ள கோவிலில் வாகனம் நிறுத்த தற்காலிகமாக அலுவலகம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நிரந்தரமாக தீயணைப்பு நிலையத்திற்கு ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் நிதியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகிலுள்ள வடக்கு கிழக்குச் சித்திரை வீதி சந்திப்பில் உள்ள வேளாண் மண் பரிசோதனை மைய கட்டிடத்தை இடிக்கப்பட்டு முதல் தளத்துடன் கூடிய கட்டிடம் 12 சென்ட்டில் கட்ட அரசு ஒப்புதல் வழங்கியது.
புதிய தீயணைப்பு நிலையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!