தமிழகம்

அரசு மேல் நிலைப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர மறுத்த ஆண்டிப்பட்டி எம் எம்எல்ஏ மகாராஜன்

38views
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, குன்னூர் பகுதி 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இன்று ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பழங்குடியினர் அமைச்சர் கயல்விழி குன்னூர் அரசு மேல் நிலைப் பள்ளி திடீரென ஆய்வு மேற்கொண்டார்,
அப்போது குன்னூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் மழை காலங்களில் மழைநீர் தேங்குகிறது. மாணவ, மாணவிகளுக்கு போதிய விளையாட்டு மைதானம் இல்லாதது குறித்து அமைச்சரிடம் கேட்ட போது உடனடியாக செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது குறிக்கிட்ட ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் இந்த பகுதி நீர் பிடிப்பு பகுதி எனவே பள்ளிக்கு கூடுதல் வசதிகள் செய்து தர முடியாது என தெரிவித்தார்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கிராமத்தை நீர் பிடிப்பு பகுதி என்று தெரிவித்தது வேதனை அளிக்கிறது. அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர மறுக்கு ஆண்டிப்பட்டி எம் எல்ஏ.
செய்தியாளர்: A. சாதிகபாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!