தமிழகம்

தேனி பழைய பேருந்து நிலையத்தில் வங்கி பெயரைச் சொல்லி ஏமாற்றும் பேர்வழிகளிடம் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது

31views
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையத்தில் இன்று பொது மக்களுக்கு வங்கியின் சேவைகள் பற்றியும் வாடிக்கையாளர்களை வங்கி பெயரைச் சொல்லி ஏமாற்றும் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நாடகமும் ஈரோடு ஜெயம் டிரஸ் சார்பாக நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார் மேலும் இந்த நிகழ்வில் தேனி மாவட்டம் முன்னோடி வங்கி மேலாளர் T.மோகன் குமார்.மற்றும் தேனி கரூர் வைசியா வங்கி DGM. என். சக்கரவர்த்தி மற்றும் முதன்மை மேலாளர் செந்தில்குமார் கிளை மேலாளர் எம்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வங்கியின் செயல்பாடுகள் குறித்தும் ஏடிஎம் பின் நம்பரை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் எனவும் வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் எந்த போன் அழைப்புகள் வந்தாலும் அது வங்கியில் இருந்து தான் வருகிறதா என சரி பார்த்து கூறவும் ஏடிஎம் பின் நம்பர் கேட்டாலும் தர வேண்டாம் எனவும் குறிப்பாக இந்தியாவில் குர்கா மேற்கு வங்கம் பகுதியில் இருந்துதான் இந்த தவறுகள் நடக்குது எனவும் ஆகவே வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டால் மட்டுமே உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து திருடு போவது குறையும் எனவும் தவறுதலாக தாங்கள் செயல்பட்டால் சைபர் கிரைம் என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் உங்கள் களவாடப்பட்ட பணம்உங்களுக்கு உடனே கிடைக்க முயற்சி செய்வார்கள் என்று எடுத்து கூறினார்.  இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!