தமிழகம்

இராஜபாளையம் அருகே முகவூரில் இயற்கை விவசாயம் மற்றும் சாலை பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி மாநில அளவிலான மாபெரும் விழிப்புணர்வு மராத்தான் போட்டி 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்பு.

54views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முகவூர் பகுதியில் 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இயற்கை விவசாயம் மற்றும் சாலை பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி என்.எம்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக முதலாம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடைபெற்றது. மாநிலத்திலிருந்து 16 மாவட்டத்தை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்
இந்த போட்டியானது நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 21 கிலோமீட்டர் மற்றும் 7 கிலோமீட்டர் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்காக 3 கிலோமீட்டர் தூரம் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியினை இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜ் மற்றும் அம்மையப்பர் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மரத்தான் போட்டிகளை துவக்கி வைத்தனர். மேலும் நிகழ்ச்சியில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
ஆண்களுக்கான 21 கிலோமீட்டர் போட்டியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரி சரத் முதலிடத்தையும்,இரண்டாவது இடத்தை ஊட்டியை சேர்ந்த பிரனேஷ்.மூன்றாவது இடத்தை ஈரோடு சேர்ந்த சிவானந்தம் பிடித்து பரிசுகளை வென்றனர் இதே போல் 19 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் விருதுநகர் மாவட்டம் முகூரைச் சேர்ந்த கௌசிகா முதலிடத்தையும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆன்சி இரண்டாம் இடத்தையும்,மூன்றாவது இடத்தை கன்னியாகுமரியை சேர்ந்த ஆன்ட்லின் லிரிண்டா ஆகியோர் முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.  மேலும் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் முதலிடத்தையும் கோயம்புத்தூரை சேர்ந்த ஆகாஷ் 2018 தர்மராஜா ஸ்போர்ட்ஸ் கிளப் சஞ்சய் சித்தர் மூன்றாவது இடத்தையும் பிடித்தவர்.
இதேபோல் பத்து வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதி சேர்ந்த மணிகண்டன் முதலிடத்தையும் ரஸ்மிதா முனிஸ்வரன் இரண்டாவது மூன்றாவது இடத்தில் பிடித்து வெற்றி பெற்றனர் வெற்றி பெற்ற நபர்களுக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஆண்கள் பிரிவில் முதலிடத்தில் பிடித்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அதே போல்முதலிடத்தை பிடித்த மாணவிக்கு 5000 ரூபாயும் பரிசுகளை வழங்கி சான்றிதழ் வழங்கினார் நான்கு பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு என என 66 ஆயிரத்து 600 ரூபாய் பரிசு தொகையில் வழங்கினர் இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பங்கு பெற்றதற்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!