தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசு விருது

310views
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறந்த சிகிச்சை மற்றும் செயல்பாடுகளுக்கான தமிழ்நாடு அரசின் மாநில அளவிலான விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பாராட்டுச் சான்றிதழை பெற்றுக்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த வருடம் அதிகமான பயனாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்த மருத்துவமனைகளுக்கு மாநில அளவில் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்பட்டது. மருத்துவமனைகளின் வரிசையில் தென்காசி மாவட்டத்தில், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஆகாஷ் ஜனவரி 26, 74 வது குடியரசு தினத்தன்று வழங்கினார். தென்காசி தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பாராட்டுச் சான்றிதழை பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா, கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரையும் வெகுவாக பாராட்டினார். இந்த விருதினை பெற்றுக்கொள்ள காரணமாக இருந்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!