தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் மனைவிக்காக ஆஜரான பெண் வழக்கறிஞரை தாக்கிய கணவர் கைது

171views
மதுரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் நீதி மலர். இவர் 11 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஆதி சுகன்யா என்பவருக்கும் அவரது கணவர் கார்த்திக் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த புகார் சம்பந்தமாக மதுரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக ஆதி சுகன்யா மற்றும் அவரது கணவர் கார்த்திக் இருவரும் ஆஜராகி உள்ளனர்.
அப்போது வழக்கறிஞர் நீதி மலர் காவல் நிலையத்திற்கு வெளியே இருந்துள்ளார். விசாரணைக்கு பின்னர் இருவரும் வெளியே வரும்போது கார்த்திக் வழக்கறிஞர் நீதி மலரை ஆபாச வார்த்தையில் திட்டியுள்ளார் .
இதில் இரு தரப்பிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.  இதில் நீதி மலர் மற்றும் அவருடன் இருந்த வழக்கறிஞர் சாகுல் என்பவரை கார்த்திக் மற்றும் அவரது தாயார் இருவரும் தாக்கியதாக கூறப்படடுகிறது.  இதில் காயமடைந்த வழக்கறிஞர் நீதி மலர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் நீதி மலர் சார்பாக மதுரைற திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் கார்த்திக் மீது நான்கு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் நீதி மலர் மீது திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!