தமிழகம்

தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தனுஷ்கோடி, ராமநாதபுரத்தில் ஆய்வு

121views
தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர கூட்டரங்கில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூர் தொகுதி), கே.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), பொது கணக்குக்குழு செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒவ்வொரு துறையிலும் உரிய நிதி ஒதுக்கீடு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தனர். முன்னதாக தனுஷ்கோடி பகுதியில் கடல் ஆமை குஞ்சு பொரிப்பகம், அதன் பாதுகாப்பு தன்மை குறித்து பார்வையிட்டனர். மண்டபம் வடக்கு ‘ தெற்கு பகுதிகளில் ரூ.20 கோடி மதிப்பில் மீன் இறங்கு தளம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். அழகன்குளம் ஊராட்சி, பொன்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அலையாத்தி காடுகள் உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை பார்வையிட்டனர் சக்கரக்கோட்டை பகுதியில் சிட்கோ வளாகத்தில் தொழில் முனைவோருக்கு தேவையான இடங்களை வழங்க உரிய வழிகாட்டுதலை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களிடம் தெரிவித்தார்.

தெற்குதரவை ஊராட்சியில் முன்னோடி விவசாயி இயற்கை வேளாண் முறையில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ள இயற்கை உணவுகளை பயன்படுத்தும் வகையில் விவசாயிகள் இயற்கை வேளாண் உற்பத்தியை செயல்படுத்த வேண்டும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கணவரை இழந்தோர், முதியோர் உதவித்தொகை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை என 24 பயனாளிகளுக்கு ரூ.2.88லட்சம் மதிப்பில் நிவாரணத் தொகைக்கான ஆணை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.53,407 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள், மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.39 ஆயிரம் மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள என 40 பயனாளிகளுக்கு ரூ-38.04லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பொதுக் கணக்குக்குழு தலைவர் கு.செல்வபெருந்தக வழங்கினார்.

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் ராம.கருமாணிக்கம், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) வி.எஸ்.நாராயண சர்மா, மாவட்ட வன உயிரின காப்பாளர் திரு. பகான் ஜக்தீஷ் சுதாகர், சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் பி.தேன்மொழி, துணைச் செயலாளர் பா.ரேவதி, சார்பு செயலாளர் ஜே.பாலசீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!