தமிழகம்

சாயல்குடியில் செல்போன் கடை உடைப்பு: தூத்துக்குடி வாலிபர் கைது

209views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் இரவு வேலைகளில் பூட்டி இருந்த மொபைல் கடையில் திருடு போனது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அறிவுறுத்தல் படி, கீழக்கரை டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் கீழக்கரை குற்றப்பிரிவு தடுப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த 4 மாதத்திற்கு மேல் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் மொபைல் போனின் ரகசிய எண் மூலம் விற்பனை செய்த கடைக்காரரிடம் விசாரித்தனர். தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த முனீஸ்வரனை (24) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மொபைல் போனை திருடி விற்றதை ஒப்புக்கொண்டார், இதை தொடர்ந்து மொபைல் போன் விற்பனை செய்த பணம் கைப்பற்றப்பட்டது.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!