தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் கேரள மாநில கழிவுகளை கொட்டி சென்ற இருவர் கைது

279views
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் கேரள மாநில கழிவுகளை கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் கொட்டி சென்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நாரணாபுரம் பகுதியில் கடந்த 08.11.2022 மற்றும் 24.11.2022 ஆகிய நாட்களில் கேரளாவிலிருந்து வாகனத்தில் கழிவுகளை கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் சிலர் கொட்டிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக திருவேங்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கழிவுகளை கொட்டி சென்றது கொல்லம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளரான அசீம் (23) மற்றும் ஆட்கொண்டார்குளம் பகுதியை சேர்ந்த முருகன் @ வெள்ளத்துரை (50) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் இருவரும் கழிவுகள் கொட்டி சென்றதை ஒப்புக்கொண்டனர். மேலும் விசாரணையின் போது காவல் துறையினரை அசிங்கமாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மேற்படி இருவர் மீதும் காவல் ஆய்வாளர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!