தமிழகம்

அருணாச்சலா பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த மேஜர் ஜெயந்த் உடல் இரவு.12.20 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது .

47views
சூலூர் 35வது துப்பாக்கி படை பிரிவு மேஜர் சேகர் பாணி கிரேகி தலைமையில் 21 வீரர்க்ள் மேஜர் ஜெயந்தின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.  தமிழக அரசு சார்பில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அருணாசல பிரதேசம் மாண்டல பகுதியில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இராணுவ மேஜர் ஜெயந்தின் உடல் தலைநகர் திசாப்பூரில் அஞ்சலி செலுத்தப்பட்டு விமானப்படை விமானம் மூலம் லெப்ட்டினன்ட் கர்னல் ரெட்டி உடல் 9.40 மணிக்கு ஐதாராபாத் விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் மேஜர் ஜெயந்த் உடலுடன் இரவு 10.20 மணிக்கு ஜதராபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 12.. 20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.  மதுரை விமானநிலையத்தில் சூலூர் 35வது ரைபில் ரெஜிமண்ட் ( துப்பாக்கி படை)யினர் மேஜர் ஜெயந்த் உடலை இறுதி அஞ்சலி செலுத்த எடுத்து வந்தனர்.
தமிழகஅரசு சார்பில் வணிகவரித்துறை அமைச்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  இறுதி அஞ்சலிக்கு பின் மேஜர் ஜெயந்த் உடல் மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. மீண்டும் நாளை காலை 7 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்களம் கொண்டு செல்லப்படுகிறது.
அருணாசலபிரதேசம் மாண்டலா பகுதியில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த லெப்ட்டினன்ட் கர்னல் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்தின் உடல் தலைநகர் திசாப்பூரில் உள்ள இராணுவ மையத்தில்.அஞ்சலி செலுத்தப்பட்டு விமானப்படை விமானம் மூலம் அவர்களது சொந்த ஊரான (லெட்டினன்ட் கர்னல் ரெட்டி உடல் ஐதராபாத் கொண்டு செல்லப்ப்பட்டு அங்கிருந்து தெலுங்கானவில் உள்ள ஏடாட்ரி பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது.  இதேபோல் மேஜர் ஜெயந்தின் உடல் அதே விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்படுகிறது.
மதுரை விமான நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அணிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் சிங் சித், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் யாதல் ,, மதுரை மாநகர் வடக்கு காவல் துணை ஆணையர் அரவிந்தன், மதுரை விமான நிலைய இயக்குநர் கணேசன்,
மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன். மற்றும் முக்கிய பிரமுகர்கள் இறுதி அஞ்சலிக்கு பின் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை கொண்டுசெல்லப்ப&டு மீண்டும் நாளை காலை 7 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!