தமிழகம்

நிரந்தர பணிநீக்கத்தை திரும்ப பெற வேண்டும்!-மாநில தலைவர் வேண்டுகோள்

81views
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது.
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள சித்தலவாய் ஊராட்சியின் 06 வது வார்டுக்கான ஒதுக்கீடு பொது(பெண்) என்பதற்கு பதிலாக பொதுப்பிரிவுக்கு உதவி தேர்தல் அலுவலர் ஒதுக்கீடு செய்து 2019 ம் ஆண்டின் இறுதியில் தேர்தல் நடத்தி தேர்வு சான்று வழங்கியதனை அடுத்து தற்போது விசாரணையில் மிக கடுங்குற்றமாக கருதி இயற்கை நியதிக்கு முரணாக சிறிதளவும் வாய்ப்பளிக்காமல் அப்போதைய தேர்தல் நடத்தும் அலுவலரும்/ஆணையாளருமான வெங்கடாச்சலம் அவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டிருப்பது தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்களையும்,பணியாளர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது!
ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் பல்வேறு கடும் நெருக்கடிகளுக்கு இடையே 23 ஊராட்சி தலைவர்கள்,20 ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,02 மாவட்ட கவுன்சிலர்,246 வார்டு உறுப்பினர்கள் என மிக அதிகமான எண்ணிக்கையில் பிரதிநிதிகள் தேர்வு செய்யும்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்தான் இதனை கூர்ந்து கவனித்து திறம்பட செய்திருக்க வேண்டும்.வாக்காளர் பட்டியல் தயாரிப்பது,பூத் சிலீப் தயாரித்தல்,பயிற்சிகள்,தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம்,அறிக்கைகள் சமர்ப்பித்தல்,வாக்குச்சாவடிமையங்கள் தயார்படுத்துதல்,பர்னிச்சர்கள்,வாக்குபெட்டிகள்,காவல்துறை பணிகள்,வாக்குசீட்டு பிரிண்டிங்க் பணிகள்,அதனை சரிபார்த்தல்,வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தல்,சின்னங்கள் ஒதுக்குதல்,ஆய்வுக்கூட்டங்களில் பங்கெடுத்தல் என எண்ணிலடங்கா பிரச்சனைகளில் தவிக்கும் சூழலில் இத்தவறுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரை முழுப்பொறுப்பாக்கி நிரந்தர நீக்கம் செய்துள்ளது சரியன்று!
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் 2016 ம் ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலின்போது இதே ஊராட்சியில் உதவி தேர்தல் அலுவலராக இருந்துள்ளார்..அப்போது இந்த வார்டு பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது..குற்றம் பெரிதாயினும்,அதற்கு வழங்கப்பட்ட தண்டனை என்பது ஒரு அரசு பணியாளர் மீது எடுக்கப்பட்ட உட்சபட்ச தண்டனையாக உள்ளது!
எனவே கரூர் மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலத்திற்கு வழங்கப்பட்ட உயர் தண்டனையை ரத்து செய்வதுடன் கடந்த காலத்தில் அவர் இத்துறையில் ஆற்றிய ஆத்மீகமான பணியையும்,அவரின் குடும்ப நிலையையும் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்கி மீள பணியில் சேர நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!