தமிழகம்

சென்னை கோவூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் DR.APJ ABDUL KALAM 2021 DREAM TRUST சார்பாக நடைபெற்ற பிறந்த நாள் விழா

198views
சென்னை கோவூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று 30-10-2023 திங்கட்கிழமை அறிவியல் மேதை டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ட்ரீம் டிரஸ்ட் DR.APJ ABDUL KALAM 2021 DREAM TRUST சார்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப் பெற்று அதில் வெற்றி பெற்ற 80-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.வீரலட்சுமி மற்றும் அப்துல் கலாம் ட்ரீம் டிரஸ்ட் அறக்கட்டளையின் நிறுவனர் கல்வியாளர் திரு.S.உதயகுமார் மற்றும் சிறப்பு விருந்தினராக Life line மருத்துவமனை நிறுவனர் Dr.J.S.ராஜ்குமார் மற்றும் முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் திரு.சண்முகம் மற்றும் திரு.பிரபு திரு.முத்தமிழ் முதல்வன் என பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அப்துல் கலாம் அறக்கட்டளையின் பல்வேறு பொறுப்பில் இருக்கும் திரு.ராமமூர்த்தி.SI(Retd) காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.R. வெங்கட்ராமன். திருமதி M.ஜீவா. ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி மகிழ்ந்தார்கள்.
மேலும் மாணவ மாணவிகளுக்கு ஊக்க பயிற்சி மற்றும் மேற்படிப்பு படிக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் இந்த நிகழ்ச்சியை அழகாக ஒருங்கிணைத்த அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் அப்துல் கலாம் ட்ரீம் டிரஸ்ட் அறக்கட்டளையின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!