dig
தமிழகம்

நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை

54views
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியால் நாளை (நவ.18) மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. தென் கிழக்கு வங்காள விரிகுடா அந்தமான கடற்பகுதியில் நேற்று (நவ.16) முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இது படிப்படியாக நகர்ந்து தென் மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நாளை (நவ. 18) முதல் நவ. 21 வரை தொடரக்கூடும்.
காற்றின் வேகம் மணிக்கு 45 கிமீ முதல் 65 கிமீ வரை வீசக்கூடும். இதனால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பிற்கிணங்க, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முதல் சூரங்காட்டுவலசை பகுதிகளில் உள்ள விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் நவ.18 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் தங்கள் படகுகள், மீன்பிடி உபகரணங்களை கரையிலிருந்து எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
அலைகளால் விசைப்படகுகள் பாதிக்கா வகையில் போதிய இடைவெளியில் நங்கூரமிட்டு படகுகளை நிறுத்த வேண்டும் என மண்டபம் மீன்வளம் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!