தமிழகம்

இராஜபாளையத்தில் தனிநபர்களின இடங்களை ஆக்கிரமிப்பு செய்து மிரட்டி வந்த நபரிடம் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் வருவாய்த் துறையினர் நடவடிக்கை

45views
விருதுநகர் மாவட்டம் இ தென்றல் நகர் சாலையில் தனி நபர்கள் எட்டு பேரின் சொத்துக்களை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்து மிரட்டி வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்றாலும் அவர்களை ஆபாசமாக பேசி மிரட்டி வந்த நபர்களிடமிருந்து 10 கோடி ரூபாய் சொத்து மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்த வட்டாட்சியர்
இராஜபாளையம் தென்றல் நகர் செல்லும் சாலையில் சர்வே எண் 176 உட்புறவின் கீழ் இடங்கள் வீட்டுமனையாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது அதில் இடம் வாங்கியவர்கள் 200க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர் .
அதில் எட்டு நபர்களுக்கு சொந்தமான 60 சென்ட் இடங்களை அதே பகுதியைச் சேர்ந்த மலர்க்கொடி என்ற நபர் மற்றும் அவர் குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து மரங்களை வளர்த்து வந்துள்ளனர் இடத்தின் உரிமையாளர்கள் கேட்டு சென்றால் அவர்களை ஆபாசமாக பேசியும் மிரட்டியும் வந்துள்ளனர் இது தொடர்பாக இடத்தின் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றி தர உத்தரவு வாங்கியுள்ளனர் மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர் .
மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உதவினனுடன் ஆக்கிமிப்புகளை ஈடுபட்டனர் அப்பொழுது ஆக்கிரமிப்பு செய்த நபர் வட்டாட்சியர் மிரட்டி வாக்குவாத்தி ஈடுபட்டனர் இதை அடுத்து காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்தனர் 60 சென்ட் இடங்களை அகற்றிக் கொண்டிருந்த பொழுது மற்றொரு நபர் என்னுடைய ஏழு . சென்ட் இடந்தமீட்டுத் தாருங்கள் என கோரிக்கை வைத்தனர் இருந்த 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மீட்டு கொடுத்ததால் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!