தமிழகம்

நஞ்சில்லா வேளாண்மை மிதிவண்டி பயணம் 2022

213views
மதுரையில் இருந்து ( கரூர் ) வானகம் வரை நஞ்சில்லா வேளாண்மைக்காண மிதிவண்டி பயணம்.
இந்த மிதிவண்டி பயணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.அனீஸ்சேகர் IAS.., அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க தலைவர் வெள்ளைச்சாமி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஊடகவியல் பிரிவு தலைவர் நாகரத்தினம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவா, மதுரை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார்,திருநகர் பக்கம் குழுவினர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பயணமானது தோராயமாக ஆறு நாட்கள். பாரம்பரிய நெல் மற்றும் காய்கறி விதைகளை பரவலாக்குதல், கிராமங்கள் தோறும் கூட்டுப் பண்ணை விவசாயத்தை ஊக்கப்படுத்துவது, நீர் நிலைகளை பாதுகாப்பது, கிராம சபை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கெடுக்க வைப்பது, மற்றும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளை மக்கள் இயக்கமாக மாற்ற இந்த பயணத்தை மேற்கொள்வதாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் அன்னவயல் காளிமுத்து அவர்களின் தலைமையில் இந்த பயணம் நடைபெற்றது. இந்த மிதிவண்டி பயணத்தில் நித்தியானந்த், மகேஷ், அறிவானந்த பாண்டியன், மற்றும் உமா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பயணம் மேற்கொள்கின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!