தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு இலவச பொக்லைன் எந்திர சேவை… ஆட்சியர் தகவல்

40views
விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்கள் மராமத்து பணிகள், வரத்துக்கால்வாய் தோண்டும் பணிகள், பண்ணைக்குட்டை அமைத்தல் மற்றும் விவசாயப் பணிகளுக்காக இலவச பொக்லைன் எந்திர சேவைத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தகவல் வெளியிட்டுள்ளார். ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இண்டஸ் இண்ட் வங்கி மற்றும் பிரதான் மாவட்ட திட்டம் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் கண்மாய்கள், வரத்துக்கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், பண்ணைக்குட்டை அமைத்தல் மற்றும் விவசாயப் பணிகளுக்காக சுமார் 72 லட்சம் ரூபாய் மதிப்பில், இண்டஸ் இண்ட் வங்கி – பிரதான் மாவட்ட திட்டத்தின் கீழ் 2 பொக்லைன் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள விவசாயிகளுக்கு பொக்லைன் சேவை இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள், மாருதி நகர், கச்சேரி சாலை, விருதுநகர் என்ற பிரதான் நிறுவன அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் 94451 – 23288 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!