தமிழகம்

மானிய விலையில் விவசாய உபகரணங்கள் வழங்கும் விழா

53views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டாரத்தில் அயன் கொல்லமங் கொண்டான், நக்கனேரி, மேலூர் துரைசாமிபுரம், சொக்கநாதன் புத்தூர் வடக்கு தேவதானம், மீனாட்சிபுரம், சோலைசேரி, குறிச்சியார்பட்டி, சோழபுரம், மற்றும் மேலராஜகுலராமன் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் (2022-23)
தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் விதம் 300 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் முழு மானிய விலையில் ஒவ்வொரு கிராமத்திலும் வழங்கப்பட உள்ளது. மேலும் மாநில வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிறுகுறு விவசாயிகளுக்கு பண்ணைக்கு தேவையான கருவிகள்
1.கடப்பாரை
2.மண்வெட்டி
3. கை களைக்கொத்தி
4. கதிர் அறுக்கும்அரிவாள்
5. இரும்பு சட்டி போன்ற கருவிகள் 50% மானியத்தில் 460 சிறுகுறு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் அயன் கொல்லாங் கொண்டான் கிராமத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தென்னங்கன்றுகள் மற்றும் பண்ணைக்கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கியும் விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்து வரும் பல்வேறு திட்டங்களை குறித்து எடுத்துக் கூறினார்கள் . மேலும் இந்நிகழ்ச்சியில் இராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி வேளாண்மை அலுவலர் தனலட்சுமி துணை வேளாண்மை அலுவலர் மோகன் தாரியா பட்ஜக் உதவி வேளாண்மை அலுவலர்
சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு தென்னை கன்றுகள் மற்றும் பண்ணைக்கருவிகளை பெற்று பயனடைந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!