தமிழகம்

பள்ளிக்குழந்தைகளுக்காக ஒண்றிணைந்த திமுக-அதிமுகவினர். கலையரங்கம் கட்ட போட்டிபோட்டு சொந்த நிதி வழங்கினர்.

160views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டையில் உள்ளது நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி.  அரசு உதவி பெறும் பள்ளியான இப்பள்ளியில் சுமார் 1200க்கும் மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் கலையரங்கம் (விழா மேடை) கட்ட வேண்டுமென பள்ளி நிர்வாகத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையறிந்த உசிலம்பட்டி திமுகவைச் சேர்ந்த நகர்மன்றத்தலைவர் சகுந்தலா கலையரங்கம் அமைப்பதற்கான கட்டுமானப் பொருட்களை தனது சொந்த செலவில் வாங்கித் தருவதாக உறுதியளித்தார். இதனையடுத்து இன்று கலையரங்கம் அமைக்க பூமி பூஜை இன்று நடைபெற்றது.இதில் நகர்மன்றத்தலைவர் சகுந்தலா உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நகர் மன்றத்தலைவர் கட்டுமானப் பொருட்கள் சொந்த செலவில் வாங்கித் தருவதை அறிந்த அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் கட்டுமானத்திற்கான கூலிச் செலவை தனது சொந்த செலவில் தருவதாக ஏற்றுக் கொண்டார்.இவர்களின் செயல் விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காக திமுக- அதிமுக பிரமுகர்கள் போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்த நிலையில் இதுபோன்று மக்கள் நலப்பணிகளில் கட்சிப்பாகுபாட்டை மறந்து ஒண்றிணைந்தால் உசிலம்பட்டி அடிப்படை வசதியில் விரைவில் முன்னேறி விடும் எனத் தெரிவித்தனர்.
விழா இறுதியில் பள்ளித்தலைமை ஆசிரியர் மதன் பிரபு நன்றி கூறினார்.
செய்தியாளர்: உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!