தமிழகம்

மதுரை விமான நிலையம் அருகே சின்ன உடைப்பு ஜங்சன் பகுதியில் சுண்ணாம்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது அதன் மீது தனியார் பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டு 11 பேர் காயம் பட்டவர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

55views
தூத்துக்குடியில் இருந்து சுண்ணாம்பு பவுடர் ஏற்றி வந்த டாரஸ் லாரி சின்ன உடைப்பு ஜங்ஷன் அருகே வரும்போது
அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி நோக்கி வந்த எம் எம் பி என்ற தனியார் பேருந்து லாரியின் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியது. இதனால் லாரி நிலைதடுமாறி கவிழ்ந்தது. லாரியின் பின்புறம் பஸ் மோதி மேலே ஏறி நின்றது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 11 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது இதனை தொடர்ந்து அவனியாபுரம் போக்குவரத்து போலீசார் மற்றும் காவல் துறையினர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பேருந்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டு லாரியையும் மீட்க மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி இரண்டு நாள் பயணமாக மதுரை விருதுநகர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
ஆளுநர் ரவி சுற்றுப்பயணத்தை முடித்து மீண்டும் சென்னை செல்ல விமான நிலையம் வர உள்ள நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  மேலும் லாரி பஸ் விபத்தினால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!