தமிழகம்

லாரி மோதியதில் முதியவர் பலி குறுகலான இடத்தில் அதிக அளவு இருசக்கர வாகனம் பார்க்கிங் செய்தது விபத்துக்கு காரணம் என தகவல்

140views
மதுரை ஜெயந்திபுரம் ராமையா தெருவை சேர்ந்த இலங்கை ராஜன் வயது 70 இவருக்கு சம்மட்டி புரத்தில் வீடு வாடகைக்கு விட்டு உள்ளார் வாடகை பாக்கி வாங்கி விட்டு மீண்டும் ஜெயந்திபுரம் செல்வதற்காக பழங்காநத்தம் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது ஜெயம் தியேட்டர் எதிரே மணலை இறக்கிவிட்டு சாலையைக் கடந்த மணல் லாரி மோதியது இதில் இவர் மீது பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்த சுப்பிரமணியபுரம் போலீஸா மற்றும் திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை மாற்றம் செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் பசும்பொன் நகரில் இருந்து லாரி ஆனது வெளியே வந்துள்ளது அப்பொழுது இவர் பின்புறமாக சக்கரமானது ஏரி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் மேலும் குறுகலான பாதையில் பாலம் இறக்கத்தில் அதிக அளவு இருசக்கர வாகனங்கள் சாலையில் குறுக்கும் மறுக்கமாக பார்க்கிங் செய்வதாலேயே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

உடனடியாக அப்பகுதியில் உள்ள விருச்சகார வாகனங்களை முறையாக வரிசையாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது மேலும் இது போன்ற விபத்து வரும் காலங்களில் நடக்காமல் இருக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பே.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!