தமிழகம்

காட்பாடி அருகே அமைச்சர் விழாவிற்கு பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி திமுக பிரமுகர் உயிரிழப்பு

229views
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மார்கபந்து (54). இவர் வடுகந்தாங்கல் முன்னாள் திமுக பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தற்போது திமுக ஊராட்சி செயலாளராக உள்ளார்.  இந்த நிலையில் நேற்று 28-ம் தேதி திமுக இளைஞர் அணிசெயலாளர் உதயநிதி பிறந்தநாள் விழா பழைய கிருஷ்ணாவரத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொள்வதாக இருந்தது.  இதற்காக மார்கபந்து அமைச்சரை வரவேற்க வடுகந்தாங்கல் பஸ் நிலையத்தில் பிளாக்ஸ் பேனர் கட்டும் பணியில் ஈடுப்பட்டு இருந்தார். அப்பேரது மேலே இருந்த மின்கம்பியில் பேனரின் இரும்பு சட்டம் உரசியது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயேஉயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். பேனர் கட்டும் போது அவருக்கு உதவியாக இருந்த வடுகந்தாங்கல் கார்த்திகேயனுக்கும் ஏற்பட்டது. அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்த மார்கபந்திற்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இதுகுறித்து கே.வி.குப்பம் காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகிறது.
திமுக பிரமுகர் உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!