தமிழகம்

நிலக்கோட்டையில் அதிமுகவினர், தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

139views
தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்துவரி, மின்கட்டண உயர்வைக் கண்டித்து, நிலக்கோட்டை பஸ்நிலையம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன் ஆலோசனையின் பேரில், நிலக்கோட்டை நகர அதிமுக சார்பில், எம்.எல்.ஏ. தேன்மொழி, நிலக்கோட்டை கிழக்கு ஓன்றியச் செயலாளர் பி. யாகப்பன், மேற்கு ஓன்றியச் செயலாளர் எம்.கே. நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் ஆர். தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிமுக நிர்வாகிகள், திமுக அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!