தமிழகம்

தென்காசியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்; முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்

131views
தென்காசியில் தமிழ்நாடு ஆரசு ஊழியர் சங்கத்தினர் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பழைய ஓய்வூதியம், வரையறுக்கபட்ட ஊதியம், அகவிலைப்படி சரண்டர் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி ஊழியர்களையும் காலமுறை ஊதியத்தில் நிரந்தரப்படுத்த வேண்டும், 01.07.22 முதல் வழங்கப்பட வேண்டிய 4% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், அரசு துறைகளில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மு. திருமலை முருகன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை செயலாளர் மாடசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சீனிப்பாண்டி, ஜாக்டோ-ஜியோ மாவட்ட நிதி காப்பாளர் இசக்கிதுரை, தமிழ்நாடு பேருராட்சி ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கனகராஜ், தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மார்த்தான்ட பூபதி, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நெல்லை மண்டல செயலாளர் சேகர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கணேசன், தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் நிறைவுரை நிகழ்த்தினார். மாவட்ட இணைச் செயலாளர் ராஜ் நன்றி கூறினார். முன்னதாக மாவட்டத்திலுள்ள அனைத்து அலுவலகங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!