தமிழகம்

ராஜபாளையம் அருகே சோழபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி ஐஏஎஸ் ஆய்வு மேற்கொண்டார்.

118views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மானாவரி தரிசாக இருந்த 11 விவசாயிகளுக்கு சொந்தமான 17.5 ஏக்கர் நிலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தில் இருந்த முட்செடிகள் அரசு மானியத்துடன் சுத்தப்படுத்தப்பட்டு, அரசு உதவியுடன் தற்போது மக்காசோளம் மற்றும் கேள்வரகு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மரக் கன்றுகள், விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை இன்று வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி ஐஏஎஸ் ஆய்வு செய்தார். பின்னர் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை, அவர்கள் வாங்கிய பொருட்கள் குறித்தும், அதனால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் நேரில் விசாரணை செய்து தெரிந்து கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு தோட்டக் கலைத் துறை மற்றும் வேளாண்மை துறை சார்பில் மரக்கன்றுகள் மற்றும் விவசாய உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!