Uncategorizedஇலக்கியம்கட்டுரை

சீனாவைக் கட்டுப்படுத்த கோவிட்-19 ஐ ஆயுதமாக்குகிறதா அமெரிக்கா!

142views
சீனாவை அவமானப்படுத்தவும், கட்டுப்படுத்தும் நோக்கிலும் அமெரிக்க அரசு மற்றும் அதன் கூட்டளிகள் இடைவிடாத பிரச்சாரம் செய்து வருவதாக சீனா கருதுகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்முயற்சி ஆகியவற்றுடன் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம் மற்றும் ஹாங்காங், தைவான் விவகாரங்களை தவாறாக பயன்படுத்தி சீனாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அமெரிக்கா முயன்று வருவது தெளிவாக தெரிகிறது. துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்டுள்ள கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பு போன்ற உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு சுயநல அரசியல் விதிவிலக்கல்ல. இந்த ஆண்டு மே 20 அன்று நடைபெற்ற “எனது பார்வையில் சின்ஜியாங் ” என்ற தலைப்பில் ஆன்லைன் மன்றத்தில் உரையாற்றிய பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறியது போன்று சீனாவைப் பற்றிய அமெரிக்காவின் கருத்துக்கு ஆதாரங்கள் இல்லை.
கொரோனா வைரஸின் டெல்டா திரிபு பரவலை உலகம் சந்தித்து வரும் நேரத்தில், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தொற்றுநோயால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் உலகளாவிய சுகாதார சவால்களை சமாளிக்க போராடுகிறார்கள்,
கோவிட்-19 தொற்றுநோயோ அல்லது முன்பு வந்த ஸ்பானிஷ் காய்ச்சல் எபோலா போன்ற தொற்று நோய்களோ எதுவாக இருந்தாலும், அனைத்தும் எல்லையற்றது. சாதி, மதம் மற்றும் இனப் பாகுபடு அற்றது.. ஆனால் கோவிட் -19 தொற்று நோயை மட்டும் சீன வைரஸ் என முத்திரை குத்த அமெரிக்காவின் முன்னாள் டிரம்ப் அரசும் அதை தொடர்ந்து பைடன் நிர்வாகமும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
சட்டப்படி பார்த்தால் முதன் முதலில் ஒரு நாட்டில் தொற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டது என்ற அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாடு “தொற்று நோயை பரப்பியது” என்று குற்றம் சாட்டுவது என்பது சர்வதேச நெறிமுறையற்ற செயல். இரண்டாவதாக, சர்வதேச சட்டம் மற்றும் தொற்று நோய்களின் வரலாற்றில் இதுபோன்ற ஒரு முன்னுதாரணம் இல்லை, அமெரிக்காவின் தர்க்கத்தின்படி பார்த்தால் கடந்த காலங்களில் ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் இருந்துதான் தொற்று நோய்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சீனாவிற்கு எதிரான தடைகள் மற்றும் குற்றச்சாட்டுகளில் மேற்கத்திய நாடுகளின் இரட்டை நிலைப்பாடு இருப்பதை இது உணர்த்துகிறது.
மேலும் எல்லா நிலையிலும் வளர்ந்து வரும் சீனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டிருப்பதைக் அது காட்டுகிறது. கடந்த நவம்பரில் நடந்த உலக சுகாதார பேரவையின் கூட்டத்தில், அதிபர் ஷிச்சின்பின் சந்தேகத்திற்கு இடமின்றி, தொற்றுநோய்க்கான மூல காரணங்களைத் தீர்மானிக்க வெளிப்படையான விசாரணைக்கு சீனா தயாராக இருப்பதாகவும், சீனா விசாரணைக் குழு மற்றும் உலக சுகாதார அமைப்புடன் முழுமையாக ஒத்துழைக்கும் என்றும் கூறினார் அதைத் தொடர்ந்து சீனாவின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் குழு மற்றும் உலக சுகாதார அமைப்பு 28 நாள் கூட்டு விசாரணையை சீனாவில் நடத்தியது.
இந்த ஆண்டு மார்ச் 30 அன்று உலக சுகாதார அமைப்பால் வெளியிடப்பட்ட கூட்டு விசாரணை அறிக்கையில் பின்வரும் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
i) ஆய்வக கசிவின் மூலம் தொற்றுநோய் பரவியிருப்பதற்கான சான்றுகள் இல்லை;
ii) கொரோனா வைரஸ் பெரும்பாலும் விலங்குகளிடமிருந்து தோன்றியிருக்கலாம்.
என்று உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் தலைமையில் நடத்தப்பட்ட ஒரு கூட்டு ஆய்வின் முடிவு கூறுகிறது. இந்த அறிக்கையின் முடிவுகளை மதிக்க வேண்டும். இணக்கமான மற்றும் ஒருதலைப்பட்ச விசாரணைகளைத் தொடங்குவதற்கு மாறாக, உறுதியானதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக சுகாதார அமைப்பு ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதோடு ஒரு நியாயமான நிறுவனமாக செயல்பட வேண்டியது அவசியம். அமெரிக்கா ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய்யாக கூறி, அவர்களின் கூற்றுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லாமல் ஈராக் மீது போர் தொடுத்து என்பதை மேற்கத்திய நாடுகள் எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறதோ அவ்வளவு நல்லது என சீனா கருதுகிறது.
  • திருமலை சோமு

Right Click & View Source is disabled.

error: Content is protected !!