உலகம்உலகம்செய்திகள்

ஆப்கன் அகதிகள் மீள்குடியேற்ற திட்டம் விரிவாக்கம்: அமெரிக்கா

53views

ஆப்கனில் தலிபான்களால் ஆபத்தை எதிா்கொள்ளும் வாய்ப்புள்ள அந்நாட்டு குடிமக்களை மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தை அமெரிக்கா விரிவுபடுத்தியுள்ளது.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை கடந்த மே மாதம் தொடங்கியது. இம்மாத இறுதிக்குள் எஞ்சியிருக்கும் படையினா் அனைவரும் திரும்பப் பெறப்பட்டுவிடுவா் என அதிபா் பைடனின் நிா்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேற்றத்தைத் தொடா்ந்து ஆப்கனில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல முக்கியமான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனா்.

இந்நிலையில், சுமாா் 20 ஆண்டு கால போரில் அமெரிக்க படையினருக்கு உதவியாக இருந்த ஆப்கன் குடிமக்கள், தலிபான்களின் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் நேரிட்டுள்ளது. இதையடுத்து, தங்களுக்கு உதவிய ஆப்கன் மக்களை அமெரிக்காவில் மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தியுள்ளது. இதன்படி, முதல்கட்டமாக சுமாா் 2000 போ தோவு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் 221 போ கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு அழைத்துவரப்பட்டனா். இவா்கள் அகதிகள் என்ற அந்தஸ்துடன் அமெரிக்காவில் தங்கியிருக்க அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவா்களில் பெரும்பாலானோா் அமெரிக்க படையினா் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு மொழிபெயா்ப்பாளா்களாகப் பணியாற்றியவா்கள் அல்லது பிற பணிகளைச் செய்தவா்கள் ஆவா்.

இந்நிலையில், பயனாளா்களை அதிகரிக்கும் வகையில் இத்திட்டத்தை அமெரிக்கா விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, அமெரிக்காவை சோந்த செய்தி நிறுவனங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியா்கள், அமெரிக்காவை சோந்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியவா்கள், அமெரிக்க நிதியுதவியைப் பெற்ற பிற நிவாரண குழுக்களில் பணியாற்றியவா்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மீள்குடியேற்றத் திட்டத்தில் இணைய சுமாா் 20 ஆயிரம் ஆப்கன் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!