நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 19வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் ட்ராகன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடினர்.கௌசிக் காந்தி 45 ரன்னும், ஜகதீசன் 40 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சிறப்பாக தொடக்கம் கிடைத்தும் நடுவரிசை மற்றும் கடை நிலை பேட்ஸ்மேன்கள் சொதப்ப சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 157 ரன்கள் சேர்த்தது. திண்டுக்கல் அணி தரப்பில் சிலம்பரசன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
158 என்ற எளிய இலக்குடன் ஆடிய திண்டுக்கல் ட்ராகன்ஸின் அருண் 18 ரன்னும், ஹரி நிஷான்ந் 38 ரன்னும் எடுத்து சுமாரான துவக்கம் தந்தனர். அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 39 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.