உலகம்உலகம்செய்திகள்

பிரபல நாட்டில் தொடரும் தாக்குதல். 20 தலீபான்கள் சுட்டுக்கொலை.

86views

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தான் ராணுவம் அந்நாட்டில் உள்ள காஜி அபாத் மாவட்டத்தில் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் ராணுவம் விமானத்தில் சென்று தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழித்துள்ளது.

அதில் தலீபான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், எட்டு பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் ராணுவ வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் தலீபான் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!