127
அடர் காட்டின் அமைதியில் புல்லாங்குழல் ஊதும் புள்ளினங்காள் உனை;
திடர் மேட்டில் திரியும் வில்லேருழவன் கள்ளூரக் கண்டதால்
பாலைவன பாதையில் பற்றிக் கொண்ட நெருப்பாய் இவன் இரவின் கனவில் எரியும் நினைவானாய்!!
வற்றிய காட்டில் ஊற்றாய் தோன்றி காற்றாய் மறைந்திட
கானல் வென்றவன் உன் நாணலில் தோற்றேன்!!
ஏனோ எனக்காகத் தான் பாடினாய் என ஏமாற்றமும் கொண்டேன்
தீராக் காதல் நூறாண்டு தெளிக்க-
என் கூண்டில் உனை அடைக்கவோ?
மாயை தந்த காயம் ஆற நியாயம் மறக்கவோ!
சேரா காதல் கூறா வார்த்தையில் அழிக்க-
மாயநதி ஓடும் மனதை தீயாய் எரிக்கவோ?
மரம் தாவும் உன்னிசை மனதோடு ரசிக்கவோ!
மனம் கோனாதே என் புள்ளினமே
திசை எட்டும் கொட்டும் உன் இசைமெட்டிற்கு
ஆசைபட்டு வதைத்துனை என் வசப்படுத்தலாகேன்!!
-
இல. தாமோதரன், துபாய்
add a comment