உலகம்உலகம்செய்திகள்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் ‘புலிட்சர்’ விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் பலி

70views

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் தனிஷ் சித்திக் நேற்று இரவு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.மும்பையை சேர்ந்த தனிஷ் சித்திக், கடந்த 2018ம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றவர். டில்லி கலவரம், கோவிட் பொதுமுடக்கத்தின் போது புலம்பெயர்ந்தவர்கள், கோவிட் உயிர் பலி குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தன. இவர், ராய்ட்டர்ஸ் என்னும் பத்திரிக்கை நிறுவனத்தில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார். ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்கள் தாக்குதல் குறித்த புகைப்படங்களை எடுக்க சென்ற குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.

ஆப்கனின் கந்தகர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சென்று தலிபான்கள் தாக்குதலை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது தலிபான்களின் தாக்குதலில் நேற்று இரவு பலியானார். சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் சில நாள்களுக்கு முன், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு காணொலியை பதிவு செய்து, ‘தலிபான்களின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பித்துள்ளேன்’ எனப் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!