இந்தியாசெய்திகள்

நாளை முதல் சபரிமலை கோயில் நடைதிறப்பு..!

57views

கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது.

இதுகுறித்து, சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளதாவது; ‘கேரளாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆடி மாதப் பிறப்பையொட்டி இன்று (16ம் தேதி) மாலை சன்னிதானம் நடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை (17ம் தேதி) முதல் 21ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு கோயிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தினமும் 5,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அவர்கள் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும்.

அல்லது கோயிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன், ஆர்டிபிசிஆர் தொற்று பரிசோதனை செய்து கொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!