அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பிறகு முதல்முறையாக ஒஹையோ மாகாணத்தில் நடைபெற்ற பிரசார பாணிக் கூட்டத்தில் பங்கேற்றாா்.
வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோதலில் மீண்டும் போட்டியிடவிருப்பதாக ஏற்கெனவே அவா் அறிவித்திருந்தாா். இந்த நிலையில், தனக்கான ஆதரவைத் திரட்டும் வகையில் கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றினாா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபா் தோதலில் முறைகேடுகள் நடைபெற்ாக ஏற்கெனவே கூறிய நிரூபிக்கப்படாத தனது கருத்தை மீண்டும் வெளிப்படுத்திய அவா், அதிபா் ஜோ பைடன் தலைமையிலான தற்போதைய ஜனநாயகக் கட்சி அரசு மிகவும் மோசமாக செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினாா்.