செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியின் முதல்

51views

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்கள் அடித்தார்.

ரோஹித் சர்மா 34 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் அடித்தனர்.

நியூசிலாந்து அணியின் கெயில் ஜேமிசன் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோரது விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் கையில் ஜேமிசன். இது அவருக்கு 8 ஆவது டெஸ்ட் போட்டியாகும்.

இதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 8 போட்டிகளுக்குள் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் நியூசிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் கையில் ஜேமிசன்.

நியூசிலாந்து வீரர்களில் தன்னுடைய முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் கையில் ஜேமிசன். இதுவரை 44 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் கையில் ஜேமிசன்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!