உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு முழுமையாகக் குறையும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சில நாடுகள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் மாஸ்கோவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அமலில் உள்ள கட்டுப்பாடுகள் ஜூன் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு நேரத்தில் செயல்பட அனுமதி மறுத்தும்,பொது நிகழ்ச்சிகளில் ஆயிரம் பேருக்குமேல் பங்கேற்க தடை விதித்து மாஸ்கோ மேயர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளை காண முடியாது என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.