செய்திகள்விளையாட்டு

15 பேர் கொண்ட இந்திய அணி …வீரர்களின் பட்டியல் அறிவிப்பு.!!!

58views

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்க 2 நாட்களே உள்ள நிலையில், போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள் :

விராட் கோலி (கேப்டன்), ரகானே (துணைக் கேப்டன்), ரோகித் சர்மா, ஷுப்மான் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், சகா, அஷ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!