இது திட்டமிட்டு நடந்த சதியா.? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. மிகப்பெரிய முகாமில் நடந்த விபத்து..!!
முகாமிற்கு தீ வைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 4 அகதிகளுக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை விதித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய அகதிகள் முகாம் கிரீஸில் அமைந்துள்ளது. இந்த முகாமில் கிட்டத்தட்ட 13,000 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இதில் தங்கியிருக்கும் அகதிகளில் சுமார் 70% பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆகும். இந்நிலையில் இந்த அகதிகள் முகாமில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து முகாமில் எவ்வாறு தீ விபத்து நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார்கள். அந்த விசாரணையில் ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வந்த அகதிகளே முகாமிற்கு திட்டமிட்டு தீ வைத்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து முகாமிற்கு தீ வைத்தது தொடர்பாக ஆப்கானிஸ்தான் நாட்டைச்சேர்ந்த அகதிகள் 5 க்கும் அதிகமானோரை கிரீஸ் நாட்டின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கிரீஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை மேற்கொண்டதில் ஆப்கானிஸ்தான் நாட்டைச்சேர்ந்த அகதிகள் 4 பேரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் 4 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.