பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜிகோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை, செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா எதிர்கொண்டார். முதல் செட்டை பார்பரா 6-1 என புள்ளிக் கணக்கில் எளிதாக கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் பவ்லிசென்கோவா ஆதிக்கம் செலுத்தினார். 5-2 என முன்னிலையில் இருந்த போது, இடது தொடையில் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு பின்னர் போட்டியை தொடர்ந்தார்.
பின்னர் 2ஆவது செட்டை 6-2 என வசப்படுத்தினார். கடைசி செட்டில் பார்பரா 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். ஒரு மணி நேரம் 58 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பார்பரா 6-1, 2-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாம் தொடரில் கோப்பை வென்றார்.
கோப்பை கைப்பற்றிய பார்பரா ரூ. 14.41 கோடி பரிசுத் தொகை வென்றார். பவ்லிசென்கோவா ரூ. 6.65 கோடி பரிசு பெற்றார். இது பார்போரா கிரெஜிகோவா வெல்லும் முதல் கிராண்ஸ்ட்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.