641
அமீரக திமுக அமைப்பின் அமைப்பாளரும், திருச்சி மாவாட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளராகவும், அமீரகத்தின் நகரமான துபாயில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபராகவும், சமூக செயல்பாட்டாள ராகவும் இருந்து வரும் திரு.K.அன்வர் அலி அவர்களுடன் சிறப்பு நேர்காணல்.
வணக்கம் சார் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி ,
வணக்கம் இறைவனின் சந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் என்றென்றும் நிலவட்டும்
நிருபர் : அமீரகத்தில் இருக்கும் தமிழர்களில் மிக முக்கியமான நபர்களில் தாங்களும் ஒருவர். உங்கள் அலுவகத்தில் இருக்கும் பணிச்சுமைகளுக்கு இடையில் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி
இந்த பேட்டி எடுபதர்க்கு முன்பாக உங்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று சில கள ஆய்வுகளை செய்தோம் எப்படி உங்களால் பல்வேறான பொறுப்புகளை ஒரே நேரத்தில் செய்ய முடிகிறது
என் அனுபவத்தில் சொல்கிறேன். எந்த வேலையாக இருந்தாலும் சரி அதனை என்ன மன நிலையில் செய்கிறோம் என்பதிலே தான் இருக்கிறது இந்த கேள்விக்கான பதில். மற்றவர்களுகாகவோ அல்லது ஏதேனும் தற்காலிக தேவைக்காகவோ ஒரு பொறுப்பை ஏற்று பணிப்புரிந்தால் குறுகிய காலத்திலே உங்களுக்கு விரக்தி உண்டாகும். அதுவே காலமின்மை என்ற மனபான்மையினை உண்டாக்கவும் செய்யும். நான் தொழிலாக இருந்தாலும் சரி கழக வேலையாக இருந்தாலும் சரி அதனுடன் தொடர்புடைய சமூக சேவையாக இருந்தாலும் சரி அதனை முழு மனதுடன் செய்கிறேன். ஆகவே அவை எனக்கு நேரம் போதவில்லை என்ற வருத்தம் எழவில்லை. ஆத்மாத்த மகிழ்ச்சியே கிடைகிறது.
இளைஞராக இருக்குறீர்கள். நீங்கள் துபாயில் சில தொழில் நிறுவனங்களை பத்து ஆண்டுகளாக நடத்தி வருகிறீர்கள். நீங்கள் ஒரு பாரம்பரிய தொழிலதிபர் குடும்பத்தினை சார்த்தவரா ?
இல்லைவே இல்லை. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தினை சார்தவன். எனது பெற்றோர்களின் பிராத்தனைகளும் இறைவனின் கருணையாலும் இந்த நிறுவனங்கள் எல்லாம் என் உழைப்பால் துவக்கபட்டவையே
ஏன் உங்களுக்கு தொழில் துவங்கவேண்டும் என்ற ஆசை வந்தது ?
இந்த கேள்விக்கு பின்னால் பல வேதனைகள் இருக்கின்றன.நம்மால் வெற்றி பெறமுடியும் என்ற இறைவன் மீதும் என் உழைப்பின் மீதும் இருந்த அளவுகடந்த நம்பிக்கை தான் தொழில் தொடங்க காரணமாக அமைந்தன. நாம் வளர்ந்தால் பிறருக்கு வேலை கொடுக்க வேண்டும். நம் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை அன்பாக நடத்த வேண்டும் என்பதே… இறைவன் அருளால் அதே லட்சிய பாதையிலே பயணித்துகொண்டு இருக்கிறேன் ,,
பெரும்பான்மையான நடுத்தர வர்கத்தின் இளைஞர்கள் வேலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் வைத்திருக்கிறார்களே தவிர தொழில் துவங்கி பலருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று உங்களை போல நினைப்பதில்லையே ஏன் ?
வேலை என்பது காலையில் துவங்கி மாலையில் முடிவடைந்து விடும். ஆனால், தொழில் நிறுவனம் என்பது அப்படி அல்ல. லாபம் மட்டுமே அல்ல நஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும். துணிச்சாலான முடிவுகளை எடுக்க வேண்டி வரும். ஆதலால் இருக்கலாம் என்று நம்புகிறேன்.
உங்களை போலவே நமது இளைஞர்கள் வர வேண்டும் என்றால் என்ன யோசனை சொல்வீர்கள் ?
இந்த கேள்வியே தவறு என்றுதான் நினைக்கிறன். நமக்கு சிக்கலும் பிரச்சைகளுக்கும் பிறரை வைத்து ஒப்பிட்டு செய்வதில் துவங்குகிறது , நமக்கு எது நன்றாக வருமோ எதை நம் ஆழ்மனது விரும்புகிறதோ அந்த துறையினை தேர்தெடுத்து பயணிப்பதிலே வெற்றியின் ரகசியம் இருக்கிறது. நம்முடைய சாதகம் எது பாதகம் எது என்பதினை நாம் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம். நாம் எதில் அசாத்திய திறமை படைத்திருக்கிறோமோ அதனை விட்டு விட்டு சமுதாயம் கட்டமைக்கும் ஒரு விசயத்திலோ அல்லது சிலரை வைத்து ஒப்பிட்டோ ஒரு துறையல் இறங்கி விடவே கூடாது என்பதே என் கருத்து. உண்மையில் உங்களுக்கு ஒரு நிறுவனத்தினை துவக்கி வெற்றிகரமாக இயக்குவதே குறிகோள் விருப்பம் என்றால் சொல்லுங்கள். உங்களுக்கு வழிகாட்ட உங்கள் நண்பனாக நான் இருப்பேன்.
இந்த கோரோனா பேரிடர் காலம் உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும் எப்படி இருக்கிறது ?
இது ஒரு பெரும் சோதனைக் காலம், எனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் எளிமையான குடும்பத்தினை சார்ந்தவர்கள். ,அவர்களையும் நான் எனது குடும்ப உறுப்பினர்களாகவே பாவிக்கிறேன். அவர்களை பற்றிய கவலை எனக்கு அதிகம் இருக்கிறது. முழு அடைப்பு காலத்தில் இருந்து இன்று வரை எனது மனதில் ஓடுவது ஒன்றே ஒன்றுதான். எந்த ஒரு ஊழியர் அல்லது தொழிலாளியையும் இந்த அசாதாரண சூழ்நிலையினை மேற்கோள் காட்டி அவர்களுக்கு வேலை இல்லை என்று சொல்லிவிட கூடாது என்பதே. இறைவனின் அருளால் நினைத்ததை சாதித்தும் இருக்கிறோம் ,அதனை தவிர்த்து சென்றவருடம் முழு அடைப்பின் போது எண்ணற்ற மக்களின் அல்லல்களை பார்க்க நேரிட்டது. சமூக சேவையில் இருப்பதால் எண்ணற்ற விண்ணப்பங்கள் வந்தன. நம்மால் முடிந்தவரை அனைவருக்கும் உதவினோம் நமது சக்திக்கு அப்பாற்பட்ட அரசு அலுவலகங்கள் சார்த்த விசயங்களை சம்மந்தபட்ட துறைக்கு எடுத்து சென்றோம். அந்த காலத்தினை நினைத்து பார்க்கவே மனம் பதறுகிறது. ,இப்போது இங்கே நிலைமை சீராகி இருக்கிறது. இதே போல இந்தியாவிலும் நிலைமை சீராக எல்லாம் வல்ல இறைவனை பிராதிகிறேன். .
சமூக சேவை எண்ணம் உங்களுக்கு எங்கே இருந்து வந்தது ?
என் மனதில் இருந்துதான். சிறு வயது முதல் எதனையும் துனிச்சலுடம் செய்யும் பழகத்தில் இருந்துக்கொண்டிருப்பவன். உதவும் எண்ணம் என்பது இயற்கையாகவே இறைவன் கொடுத்த வரம் என்றுதான் சொல்ல முடியும்.
சமூக சேவை செய்வதற்கு பொருளாதார பலம் வேண்டும் அல்லவா ?
தவறான சிந்தனை. சமூக சேவை என்பது பிறருக்காக உடல் உழைப்பு செய்வது, நேரத்தினை செலவிடுவது நம்மை அற்பணிக்கு மனபான்மையினை பெற்றிருப்பது என அனைத்தினையும் உள்ளடக்கியதே. பொருளாதாரம் தேவைதான் சில சமயங்களில். ஆனால் பொருளாதாரம் மட்டுமே பிரதானம் அல்ல. பிரதானம் என்பது நம்மை பிறர் நலனுக்காக அற்பணிக்கும் மனப்பான்மை தான். நான் பள்ளிப்படிக்கும் நேரத்திலேயே என் சமூக சேவையினை துவங்கி விட்டேன். அன்றைக்கு எனக்கு வீட்டில் என் கைசெலவுக்கு ஒரு ருபாய் கூட கிடைக்காது. தெருவில் இருக்கும் குப்பைகளை நண்பர்களுடன் இணைந்து சுத்தம் செய்வது, தெருவிளக்கு எரியவில்லை என்று நகராட்சி ஊழியர்களுக்கு கடிதம் எழுதியது என துவங்கியதே ,,பின் கல்லூரி காலத்தில் நான் பயின்ற திருச்சி ஜமால் கல்லூரி என் சிந்தனை பலவற்றிற்கு செயல்வடிவம் கொடுத்தது. என்னைப் போன்ற பலரை என்னைவிட சிறப்பான பலரையும் செதுக்கியது அதுவே. அதன் நிர்வாகத்திற்கு நான் என்றும் கடமை பட்டு இருக்கிறேன்.
அரசியல் ஆர்வம் வந்தது எப்படி ??
அரசியல் ஆர்வமும் எனது கல்லூரி காலத்தில் இருந்தே எனக்கு இருந்தது தினசரி நாளிதழ்கள் தவறாது வாசிப்பேன். நாம் விரும்புகிறோமோ இல்லையோ அரசியல் நமது வாழ்கையில் அன்றாடம் தலையிட்டு கொண்டே தான் இருக்கும். தமிழ் நாளிதழ்களின் தலையங்கங்களை தொடர்து வாசித்து தமிழக அரசியல் மற்றும் தேசிய அரசியல் குறித்து ஆற்வமும் புரிதலும் ஏற்பட்டது.
பெரும்பாலான தொழிலதிபர்கள் மறைமுகமாக இருகிறார்கள். நேரடி அரசியலில் இருப்பதை விரும்புவதில்லை. நீங்கள் ஏன் நேரடி அரசியலில் இருகிறீர்கள் ?
இந்தகேள்வியினை கேட்டதும் சிரிப்புதான் வருகிறது. தொழிலதிபர்கள் பலர் நேரடி அரசியலில் இல்லாமல் மறைமுக அரசியலில் இருபதற்கு காரணம் எந்த ஆட்சி கட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஆதர்வாளர்களாக தங்களை காட்டி கொண்டு சலுகைகளை பெறலாம் என்பதற்காக இருக்கும் என நம்பகிறேன். எனக்கு வேடமிடுவது பிடிக்காது. என் மனதிற்கு சரி என்று பட்டதை பேசுவேன். அப்படியே நடப்பேன். ஆகவே நேரடி அரசியலில் என்னை ஈடுபடுத்தி கொண்டேன்.
ஏன் திராவிட முன்னேற்ற கழகதை தேர்வு செய்தீர்கள் ?
பல காரணங்கள் உண்டு. நன்றி உணர்வின் வெளிபாடு என்பதே முதன்மையான காரணம். என் அலுவலகத்தில் பல்வேறு மாநிலத்தில் இருந்து ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களும் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியிருகிறேன். தொழில்முறை பயணமாக பல்வேறான மாநிலங்களுக்கு சென்றும் இருக்கிறேன். அவர்களின் சமூக சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலை, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகம் பத்து மடங்கு கூடுதல் வளர்ச்சியில் இருந்திருகிறது என்பது நன்றாக புரிகிறது. சமூக நீதியினை காத்து சமத்துவத்தினை உண்டாக்கி மத பாகுபாடு இன்றி ஒரு அமைதி சூழல் நிலவுகிறது என்றால் அதற்கு பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் அவர்கள் போதித்த திராவிட சித்தாந்தமும் தான் காரணம். இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் தனி மனித குடும்ப வளர்ச்சி மேம்பாட்டினை வேறு எங்குமே பார்க்க முடியாது. பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் தமிழகத்தைப் போல வேறு எங்கும் பார்க்க முடியாது. விளிம்பு நிலையின் கட்டமைப்பே ஆதிவாசி பிள்ளைகள் கூட பொறியாளராக மருத்துவர்களாக வர முடிகிறது. இதெல்லாம் எண்ணிப்பார்த்து எனக்கு எழும் நன்றி உணர்வுதான் என்னை திமுகவில் நிலை நிறுத்தி வைத்திருக்கிறது.
வரலாற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஆளுமைகள் யார் ?
ஒருவர் அல்ல பலர் இருகிறார்கள். ஒரு மார்க்க தலைவராக முகமது நபி ( ஸல் ) அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு பிறகு எனக்கு காரல் மார்க்ஸ் அவரின் சமத்துவ கொள்கைக்காக பிடிக்கும். அம்பேத்கர் அவர்களின் தன்னம்பிக்கை என்றைக்குமே எனக்கு பிரம்மிப்பை உண்டாக்கிக்கொண்டு இருக்கிறது. பெரியாரின் துணிச்சல் பிடிக்கும். சமத்துவ நாயகன் தலைவர் கலைஞர் பத்திரிகையாளர்களை கையாளும் விதம் இன்றளவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திகிறது. உழைப்பிற்கு பெயர் போன தனக்கு எதிரான அத்துணை அசாத்திய சூழ்நிலைகளையும் தன் உழைப்பால் வென்று இன்றைக்கு தமிழகத்தினை ஆண்டு கொண்டு இருக்கிற தலைவர் ஸ்டாலினை பிடிக்கும்.
உங்களுக்கு அரசியல் கற்று தந்த ஆசான் என்றால் யாரை சொல்வீர்கள் ?
திருச்சியில் உள்ள லட்சகணக்கான கழக இளைஞர்களுக்கும் அரசியல் ஆசான் மதிப்பிற்குரிய அய்யா திரு KN அவர்கள் தான். இன்றைக்கு திருச்சி சாதி மத மோதல்கள் இல்லாமல் அமைதி பூங்காவாய் திகழவும் அவரின் உழைப்பும் ஆற்றலாமே காரணம். பொதுமக்களுக்கோ, தொண்டர்களுக்கோ ஒரு பிரச்சனை என்றால் அடுத்த நிமிடம் அவர் களத்தில் நிற்பார். நான் கல்லூரி படிக்கையில் அவரை திரைப்பட கதாநாயகனை பார்ப்பது போல பார்த்து ரசிகனாகவே இருந்திருக்கிறேன். எனது பொதுவாழ்க்கை பயணம், அவர், எனக்கு ஆசானாக இருந்து வழிகாட்டிய வழியிலே சென்று கொண்டு இருக்கிறது.
ஆட்சிகள் மாறினாலும் கட்சி மாறாது என்பார்களே புதிய அரசு குறித்து உங்கள் மதிப்பீடு என்ன ?
புதிய அரசு பதவி ஏற்று சரியாக ஒரு மாதமே ஆகிறது. இந்த ஒருமாதத்தில் பெண்கள் மாநகராட்சி பேருந்துகளில் இலவச பயணம் `ஆவின் பால் குறைப்பு , செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை ஆகியவற்றை நிறைவேற்றி காட்டியதுடன் நீட் தேர்வு ரத்து, ஏழு தமிழர்கள் விடுதலைக் குறித்தும் ஆலோசனை செய்கிறார். தேர்தல் சமயத்தில் பெறப்பட்ட கேரிக்கை மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தனி துறை உருவாக்கப்பட்டு அதற்கு ஒரு IAS அதிகரியினையும் நியமித்து மக்கள் குறைகளை தீர்த்து வருகிறார். இதனை எல்லாம் பார்க்கையில் முதல்வன் என்ற தமிழ் சினிமாவில் ஒருநாள் முதல்வராக இருக்கும் அர்ஜுன் போல தினம் தினம் செயலாற்றி வருகிறாரே என்று என்னும் வகையில் இருக்கிறது. அமைச்சரவியில் இடம்பெற்றுள்ள அணைத்து அமைச்சர்களும் கொரோனா தடுப்பு பணியில் 24 மணி நேரமும் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். மத்திய அரசையோ கடந்த அதிமுக அரசையோ குறைக் கூறி அரசியல் செய்யாமல் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறையை தவிர்க்க பன்னாட்டு நிறுவனங்களுடன் நேரடி ஒப்பந்தம் போட்டது, தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தியை துவங்க நடவடிக்கை எடுத்தது என அவர் அடிக்கும் அனைத்து பந்துகளும் சிக்சர்களே. அன்றாடம் எல்லா மாவட்டங்களிலும் புது புது ஆக்சிஜன் படுகைகளுடன்கூடிய தங்கும் இடங்கள் அமைக்கபட்டு வருகிறது. ICMR இணையதளத்தின் புள்ளிவிவர கணக்கு படி இந்தியாவிலே அதிக கோவிட் பரிசோதனை மையங்கள் மற்றும் ஆக்சிஜன் படுக்கைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடே முதல் இடத்தில இருக்கிறது. என் மதிப்பீடு அல்ல திமுகவிற்கு வாக்களிக்காத பலர் கூட என்னிடத்தில் தலைவரை மனதார பாராட்டுகிறார்கள். நூற்றுக்கு நூறு என்று. இதனை எல்லாம் பார்த்துவிட்டு அதிமுக, திமுக ஒன்று. காட்சிகள் மட்டும் மாறது என்று ஒருவர் கூறுகிறார் என்றால் அவசர் யாராக இருக்க நேரிடும் எப்பேர்பட்ட மனநிலை உடையவராக அரசியல் அறிவு கொண்டவராக இருப்பார் என்பதினை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. மக்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.
பரபரப்பு சூழநிலைக்கு மத்தியில் வெகு இயல்பாக தன் கருத்துகளை தெளிவாக முன் வைத்தார் திரு. அன்வர் அலி.
இன்னும் பல உயரங்களை தொடவேண்டும்
வாழ்த்துகளை சொல்லி விடைபெற்றோம்.
add a comment